இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

​ஜிபிஎஸ் காட்டிய வழியில் சென்று தண்ணீருக்குள் காரைவிட்ட டிரைவர்!

January 29, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
13308 Views

தொழில்நுட்ப பெருக்கத்தால் விளைந்திருக்கும் நன்மைகளில் ஒன்று ஜி.பி.எஸ். ஊர் பேர் தெரியாத இடங்களுக்குக்கூட ஜி.பி.எஸ் உதவியுடன் சென்றுவர முடியும் என்கிற பயண சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ஜி.பி.எஸ்.

ஆனால் அதேநேரம், ஜி.பி.எஸ்-ல் பலதவறான குறிப்புகளும், வழிகாட்டுதல்களும் இருப்பதால் சிலநேரங்களில் ‘பங்கமான’ சம்பவங்களும் அடிக்கடி நடந்துவருகின்றன. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவின் வெண்டாரில் நடந்துள்ளது.

டாக்ஸி டிரைவர் ஒருவர் பயணிகளோடு வண்டி ஓட்டி சென்றுள்ளார். ஜி.பி.எஸ் காட்டிய வழியில் ‘சிவனே’ என சென்றுகொண்டிருந்தவர் தொடர்ந்து ஜி.பி.எஸ் சொல் தட்டாமல் நடந்துள்ளார். அதனால் வந்தது அவருக்கு வினை. சாலையைத் தாண்டி பெரும் ஏரிக்குள் வண்டியை ஓட்டிச்செல்ல வழிகாட்டியிருக்கிறது ஜி.பி;.எஸ்.

கொஞ்சம் வரைக்கும் கடும்குளிர் காரணமாக பனிக்கட்டியாக இருந்ததால், ‘நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு’ என வண்டியை செலுத்தியுள்ளார் ஓட்டுநர். போதாக்குறைக்கு அன்றைக்கு மழை வேறு. அடித்து ஊற்றிய மழையில் ஓட்டுநருக்கு கண்மண் தெரியவில்லை. இந்நிலையில், திடீரென வண்டி நீருக்குள் மூழ்கியிருக்கிறது. 
பின்னர், காவல்துறையினர் வந்து சோதித்து, ஓட்டுநர் மது ஏதும் அருந்தவில்லை என்றும் சான்றழித்து, இந்த விபத்துக்கு ‘ஜி.பி.எஸ்-ன் அட்டூழியமே’ காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

இங்கிலாந்தில் தமிழர், கருப்பின மற்றும் ஆசிய, ஆப்ரிக்க

சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Snap Chat App-இல் வெளியான தன்னை குறித்த மோசமான விளம்பரத்திற்கு

ரஷ்யாவில் ஓடும் விமானத்தில் இருந்து தங்கக்கட்டிகள், பிளாட்டினம்,

அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கைகளால் அந்நாட்டிற்கு

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)