இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Breaking News

Jallikattu Game

​விண்வெளி செயற்கோள்கள் செயலிழந்து பின் எங்கு குப்பையாக சேமிக்கப்படுகின்றன தெரியுமா?

October 25, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
19812 Views


உலகின் பல்வேறு நாடுகளால் இன்றைக்கு விண்வெளிக்கு செயற்கைகோள்கள், விண்வெளி ஆராய்ச்சிக்கலன்கள் அனுப்பப்படுகின்றன. மிகக்குறிப்பாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஏராளமான செயற்கைகோள்கள், விண்வெளி கலன்களை அனுப்பியிருக்கிறது.

இந்த செயற்கோள்கள், சில விண்கலன்கள் தனது வட்டப்பாதையிலிருந்து விலகினால் எங்கு விழுகின்றன? அல்லது ஆயுட்காலம் முடிந்த பிறகோ வேறு சில காரணங்களுக்காகவோ மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படும் விண்கலன்கள் எங்கு விழச்செய்யப்படுகின்றன தெரியுமா?

பூமியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் அமெரிக்க பகுதிகளுக்கு இடையில் இருக்கும் தென் பசிபிக் கடல் பகுதி இருக்கிறது. இப்பகுதி ‘பாயிண்ட் நிமோ’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

‘நிமோ’ என்பதற்கு இலத்தீன் மொழியில் யாருமே இல்லாத என்று அர்த்தமாகும். இந்த பாயிண்ட் நிமோ பகுதிதான் உலகின் மிக தூரமான பகுதியாகும். இந்தப்பகுதியில் இதுவரை மனித சஞ்சாரமே நடந்ததது இல்லை. நாசா விண்வெளி மையம் செயற்கைகோள்களை விண்ணிலிருந்து கீழிருக்கும் போதும், விண்வெளிக்கலன்களை ஆயுட்காலத்தை முடித்து அவற்றை நீக்கும் போதும் இந்த ‘பாயிண்ட் நிமோ’ பகுதியில் தான் விழுமாறு செய்யப்படுகின்றன.

எளிமையாக சொல்லப்போனால், மனிதர்களே சஞ்சாரிக்காத இந்த பகுதிதான் நாசாவின் தொழில்நுட்ப குப்பைத்தொட்டி.

சிறிய விண்கலன்கள் பூமிக்கு வரும் போதே விண்வெளி, பூமிக்கு இடையிலான வெப்பநிலை வேறுபாடுகளால் எரிந்து அழிந்துவிடும். ஆனால், பெரிய கலன்கள் வரும்போது அவை அதிவேகமாக பூமியை நோக்கி வரும். அத்தகைய, விண்கலன்கலை இதுபோன்ற இடங்களில் விழச்செய்வது ஒருவகையில் பாதுகாப்பனது என்றும் சொல்லப்படுகிறது.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் இரவு 10 மணிக்கு மேல் வாடகைக்கார்களில்

சிறப்பான விஷயங்களை கொண்டாடும் வகையில் டூடுல் அமைத்து

இந்தோனேசியாவில் 54 வயது பெண்ணை 7 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு

உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய தினம் 3 ஆட்டங்கள்

சீனத் தயாரிப்பு பொருள்கள் மீது, 25 சதவீதம் வரி விதிக்க,

தற்போதைய செய்திகள் Jun 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.16 /Ltr (₹ -0.08 )
  • டீசல்
    ₹ 71.54 /Ltr