​சாவை கணிக்கும் கூகுள்! | News7 Tamil when will you die: Google answers | Tamil Online News

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​சாவை கணிக்கும் கூகுள்!

June 21, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9707 Views

உலக மக்களிடையே ஏற்படும் பெரும்பாலான சந்தேகங்களுக்கு கூகுள் விடையளிக்கும். இதனால், மக்கள் அதிகம் பயன்படுத்தும் இணையதளமாக கூகுள் உருமாறி இருக்கிறது. 

கடந்த 2016ம் ஆண்டு, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெருமையையும் கூகுள் பெற்றது. 2018ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து, செயற்கை நுண்ணறிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சுந்தர் பிச்சை, கூகுளின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்களை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவை சார்ந்த பல விஷயங்கள் இருக்கின்ற பொழுதிலும், உடல் நலம் சார்ந்த விஷயங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அதனால், இதய நோய்களை கணிக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதன்மூலம் ஒரு மனிதனுக்கு ஏதாவது உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டால், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் அவர்களது உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் தெரிந்துகொள்ள முடியும். இதை பயன்படுத்தி, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் இறப்பு தேதியை கூகுள் கணித்தது. அதனைப்போலவே, கூகுள் கணித்த தேதியில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இதனைப்பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்ததோடு, இது எப்படி சாத்தியம் என்று எண்ணத்தொடங்கியுள்ளனர். இந்த வகையான சில புதுவகையான coding ஐ கூகுள் பயன்படுத்தி மனிதர்களின் நோயை கண்டுபிடித்து அது எந்த அளவு அவர்களின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )