இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

Breaking News

நீதிமன்ற தீர்ப்பால் நெருக்கடிக்கு உள்ளான ஓட்டோ நிறுவனம்!

May 19, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2715 Views

கூகுள் நிறுவனத்தின் புரோகிராம்களை ஓட்டோ நிறுவனம் சட்டவிரோதமாக எடுத்து பயன்படுத்திய வழக்கில் ஓட்டோவின் இணை நிறுவனர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக இணைய உலகின் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ‘கூகுள்’, கடந்த 2009 ஆம் ஆண்டு ‘ Waymo project’ எனப்படும் தானியங்கி கார்களை உருவாக்கும் திட்டத்தை தொடங்கியது. கூகுள் மேப்பின் உதவியோடும் கார்களில் பொருத்தப்படும் பிரத்யேக சென்சார்கள் மூலமாகவும் ஓட்டுனரின் உதவியின்றி கார்களை இயக்குவதே ’waymo' திட்டத்தின் குறிக்கோள். இந்த திட்டத்திற்காக கடந்த 8 ஆண்டுகளாக தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது ‘கூகுள்’.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான அந்தோனி லெவண்டோவ்ஸ்கி மற்றும்  ‘லியோர் ரான்’ ஆகியோர் ’உபர்’ நிறுவனத்தின் உதவியுடன் ‘ஓட்டோ’ எனப்படும் தானியங்கி கார்களை உருவாக்கும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இதில் அந்தோனி லெவண்டோஸ்கி என்பவர் கூகுளின் ‘waymo project'-ன் தொழில்நுட்ப தலைவராகவும், பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தங்களுடைய நிறுவனத்தில் இருந்து அந்தோனியின் மூலம் ஆயிரக்கணக்கான புரோகிராம்களை திருடி உபர் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமே,’ஓட்டோ நிறுவனம்’ என்று கூகுள் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், கூகுள் நிறுவனத்தில் இருந்து அந்தோனி வெளியேறிய அடுத்த நாளே உபர் நிறுவனத்தின் மூலம் அவரது வங்கிக்கணக்கிற்கு 25 கோடி ரூபாய் பரிமாணம் நடந்துள்ளதாகவும் கூகுள் நிறுவனம் குற்றம்சாட்டியது.

இவ்வழக்கில், கூகுள் நிறுவனத்தில் இருந்து அந்தோனி லெவண்டோவ்ஸ்கி, புரோகிராம்களை சட்டவிரோதமாக தரவிறக்கம் செய்ததற்கான மூகாந்திரம் இருப்பதாக கருதிய அமெரிக்க நீதிமன்றம், ஓட்டோ நிறுவனத்தின் தானியங்கி கார் உருவாக்கும் திட்டத்தில் அந்தோனியை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. தங்கள் நிறுவனம் வழக்கில் இருந்து தப்பித்தால் போதும் என்று கருதும் ஓட்டோ நிறுவனம், அந்தோனியை அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கவிடலாம் என்ற யோசனையில் உள்ளது. இதனால் ஓட்டோ இணை நிறுவனர் அந்தோனி லெவண்டோவ்ஸ்கி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்


தங்களுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்களை தக்க


பாலிவுட் திரையுலகின் முன்ன்ணி நடிகையாக அசைக்கமுடியாத


பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 'பாகுபலி', 'பாகுபலி

தற்போதைய செய்திகள் Nov 22
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.01 (லி)
  • டீசல்
    ₹ 61.4 (லி)