இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

பல கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டதாக பேஸ்புக் நிறுவனம் தகவல்!

October 14, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8271 Views

உலகம் முழுவதும் பேஸ்புக்கை 200 கோடி பேர் பயன்படுத்தி வரும் பேஸ்புக்கிலிருந்து கோடிக்கணக்கான் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவலை, அந்நிறுவனம் அறிவித்துள்ளது . 

கிட்டத்தட்ட 2.9 கோடி பேஸ்புக் பயனாளர்களின் பிறந்த தேதி, கல்வி, மத விருப்பம் போன்ற தகவல்கள் திருடப்பட்டுள்ளன. 

கடந்த செப்டம்பர் மாதம் பேஸ்புக் மீது சைபர் கிரிமினல்கள் இணைய வழி தாக்குதல் நடத்தினர். இணைய வழி தாக்குதல்களை அடுத்து 9 கோடி பயனாளர்களின் கணக்குகளை பேஸ்புக் நிறுவனமே லாக் அவுட் செய்தது. 

இணைய வழி தாக்குதல்களில் 1.4 கோடி பேர் பேஸ்புக்கில் கொடுத்திருந்த அடிப்படை தகவல்களும், 1.5 கோடி பேரின் அனைத்து தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பின்னர், பயனாளர்களின் பாஸ்வொர்ட் மற்றும் வர்த்தக தகவல்கள் திருடப்படவில்லை என பேஸ்புக் ஆறுதல் தெரிவித்தது. 

மேலும், பாதிக்கப்பட்ட பயனாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. 2016 -  அமெரிக்க அதிபர் தேர்தலின் போது கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் தகவல்கள் திருடப்பட்டது பெரிய சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது 


Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )