இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​செவ்வாய் கிரகத்தை ஆராய புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ள நாசா!

May 13, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8537 Views

விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லாக பறவைப் பார்வையில் செவ்வாய் கிரகத்தை ஆராயும் நோக்கில் ஒரு புதிய முயற்சியை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. 

விண்வெளி ஆய்வுகள் என்றால் இதுவரை நம் நினைவுக்கு வருவது, ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் ரோவர்கள் எனப்படும் ஆய்வு வாகனங்கள். தற்போது ரோவர் வகை வாகனங்களுடன், சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றையும் அனுப்ப நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். வரும் 2020 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டவுள்ள இந்த ஹெலிகாப்டர், அங்கு தன்னிச்சையாக பறந்து சென்று பறவைப்பார்வையிலான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த ஹெலிகாப்டர் தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக இது தொடர்பான ஆராய்ச்சிகள் நாசாவின் ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த செயற்கைப் பறவை, தரையில் பயணித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் கியுரியாசிட்டி உள்ளிட்ட ரோவர்களால் முடியாத பல விஷயங்களை சாத்தியப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பூமியை விட 100 மடங்கு மெல்லிய புறச்சூழலைக் கொண்ட செவ்வாயில் பறப்பதற்கு ஏற்ற வகையில் இதன் எடையும், இறக்கைகளின் வடிவமும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஹெலிகாப்டர்கள் 40 ஆயிரம் அடி உயரம் வரை மட்டும் பறக்க முடியும் என்ற நிலையில், இந்த விண்வெளிப் பறவை 1 லட்சம் உயரம் வரை பறக்கும் திறனுடையதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தொலைவு காரணமாக கட்டளைகள் சென்று சேர தாமதமாகும் என்றாலும், இந்த ஹெலிகாப்டர் தன்னிச்சையாகவே செயல்பட்டு ஆச்சயர்யமூட்டும் விவரங்களை அளிக்கக் கூடியது என்று நம்புகின்றனர் நாசா விஞ்ஞானிகள். 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )