இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​சூரியனை ஆய்வு செய்ய அதிநவீன விண்கலத்தை அனுப்பும் நாசா!

August 10, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9216 Views

விண்வெளி ஆராய்ச்சியில் பல புரட்சிகளை படைத்துள்ள நாசா, மேலும் ஒரு சாதனையை படைக்க உள்ளது. சூரியனுக்கு மிக அருகில் சென்று, ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கும் பார்க்கர் ப்ரோப் விண்கலத்தை நாளை (11.08.18) விண்ணில் செலுத்த உள்ளது.

இந்த உலகில் அனைத்து ஜீவராசிகளின் வாழ்வாதாரமாக இருப்பது சூரியன்தான். பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனை சுற்றி வரும் மர்மங்களோ ஏராளம். சூரியனுக்குள் என்ன நடக்கிறது? அதன் மையப்புள்ளியில் என்ன இருக்கிறது? அதன் வளிமணடலத்தின் கூறுகள் என்ன? உள்ளிட்ட  பல கேள்விகளுக்கான முழு விடைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், சூரியனை பல கோணங்களின் தெரிந்துக்கொள்வதற்கான முயற்சிகள் விண்வெளி ஆராய்ச்சி துறையில் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. 

சமீபத்தில் நாசா வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்றில், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சூரியனை மிக அருகில் சென்று தொடும் விண்கலம் ஒன்றை விண்ணில் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  சூரிய காற்றை முதன்முதலில் கண்டறிந்த விஞ்ஞானி EUGENE PARKER இன் பெயரில் இந்த விண்கலத்திற்கு PARKER SOLAR PROBE என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை சூரியனுக்கு மிக அருகில் செலுத்துவதன் முக்கிய நோக்கமே, சூரிய வளிமண்டலத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத்தான். 

பிரம்மாண்ட தீப்பிழம்பாக வாயுக்களை உமிழ்ந்துக் கொண்டிருக்கும் சூரியனின் மையத்தில் இருக்கும் வெப்பம் 150 லட்சம் டிகிரி செல்சியஸ் ஆகும். மூன்று அடுக்குகள் கொண்ட சூரியனின் வளிமண்டலத்தில், மூன்றாவது அடுக்கான கொரோமா, முதல் அடுக்கான photosphereஐ விட 300 மடங்கு அதிக வெப்பம் கொண்டிருக்கும். இந்த கொரோமா மேலடுக்கை பற்றி பல ஆண்டுகளாக ஆராய்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதை நெருங்க முடியாத சூழலை மாற்றி, கொரோமா வளிமண்டலத்துக்குள் சென்று அதன் கூறுகளை ஆராய்ச்சி செய்யத்தான் பார்க்கர் பிரோப் விண்கலம் அனுப்பப்படுகிறது.  சூரியனின் வளிமண்டலத்தை  மனித முயற்சியால் நெருங்க முடியும் என்பதை காட்டும் வரலாற்று நிகழ்வாகவே இதை உலகம் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது.  

பார்க்கர் பிரோப் விண்கலம் சுமார் 3 மாதங்களில் சூரிய சுற்று வட்டபாதையை சென்றடையும். பிறகு அங்கிருந்து 7 வருடங்கள் பயணித்து, சூரியனில் இருந்து, மிக அருகில், சுமார் 40 லட்சம் மைல் தொலைவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. அப்படி நடக்குமேயானால், அது மனித வரலாற்றில் நிகழ்த்தப்படவிருக்கும் மாபெரும் சாதனையாகும். சூரியனின் மேற்பரப்பை விட அதன் வளிமண்டலம் அதிக வெப்பத்துடன் இருப்பதற்கான காரணம் என்ன? வளிமண்டலத்தின் சூரியப்புயல் பூமியின் வானிலை மாற்றத்திற்கு வித்திடுகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் இந்த பார்க்கர் பிரோப் விண்கலம். சூரியனை நெருங்கும் போது மணிக்கு 4,30,000 மைல் வேகத்தில் பயணிக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி பயணிக்கும் பட்சத்தில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட இயந்திரங்களில் அதிவேகமாக பயணிக்கும் இயந்திரம் இதுவாகவே இருக்கும். 

1300 செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட இந்த கார் வடிவிலான பார்க்கர் பிரோப் விண்கலம பூமியில் இருந்து சுமார் 14 கோடி கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று, சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் உருகாமல், சூரியனின் அரிய புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பவுள்ளது. கொரோமா வளிமண்டலத்தை நெருங்கும் போது பூமியினுடனான இதன் தொடர்பு துண்டிக்கப்படும். எனினும் இயற்கையின் விந்தையை, மனிதனின் கடும் முயற்சியால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தமுடியும் என்பதை இது உணர்த்தியிருக்கிறது  

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )