இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

​உலக துப்பாக்கிச்சுடும் தொடரில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம்!

September 9, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4805 Views

தென்கொரியாவில் நடந்து வரும் உலக துப்பாக்கிச்சுடும் தொடரில், இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

தென்கொரியாவின் சங்க்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு, இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி, அர்ஜூன் சிங் உள்ளிட்டோர் தகுதி பெற்றனர்.

விறுவிறுப்பான இறுதிச்சுற்றில், 245 புள்ளி ஐந்து புள்ளிகளுடன் 16 வயதான இளம் வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு வீரரான அர்ஜூன் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.

கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றிருந்த சவுரப் சவுத்ரி, இந்த ஆண்டு அதனை முறியடித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசியப் போட்டித் தொடரின் துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )