இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

​அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டியில் நடுவருடன் வாக்குவாதம் செய்த செரினா!

September 9, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5581 Views

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை எதிர்த்து செரினா விளையாடியபோது, அவரது பயிற்சியாளர் அடிக்கடி சைகை செய்துள்ளார். இதனை கவனித்த ஆட்டத்தின் நடுவர், விதிமீறலில் ஈடுபடுவதாக செரினாவை கண்டித்தார். 

இதனால் போட்டியின் நடுவே, நடுவரை நோக்கி சென்ற செரினா ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது பயிற்சியாளர் கைகளால் வெற்றி பெறுமாறு தம்மை நோக்கி தம்ஸ் அப் மட்டுமே காட்டியதாகவும், ஏமாற்றி வெற்றி பெறுவதற்கு பதில் தாம் தோற்றுவிட்டே சென்று விடுவதாக காட்டமாக தெரிவித்தார். எனினும், அதை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
 

இதனால் ஆத்திரமடைந்த செரினா, தனது டென்னிஸ் பேட்டை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த செயல், ஆட்டத்தில் மீண்டும் விதிமீறலாக கருதப்பட்டு, செரினாவின் புள்ளி குறைக்கப்பட்டது. இதையடுத்து, போட்டியில் செரினா தோல்வியடைந்தார்.

போட்டி முடிந்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செரினா வில்லியம்ஸ், விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி தமது புள்ளிக்கணக்கை குறைத்ததன் மூலம் ஆட்டம் தமது கைகளில் இருந்து நழுவியதாக குற்றம்சாட்டினார். டென்னிஸ் உலகில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது சகஜம் எனவும், தாம் பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் சமத்துவத்துக்காகவும் தான் போராடியதாகவும் குறிப்பிட்டார். இந்த சம்பவம், பெண்ணியத்துக்கு எதிராக நடந்த குற்றமாகவே கருதுவதாகவும் செரினா வில்லியம்ஸ் சாடினார்.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )