முகப்பு > உலகம்

​வருகிறார் நெய்மர்!

August 31, 2017

​வருகிறார் நெய்மர்!உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச்சுற்றில் ஈகுவடாருக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணிக்காக நீண்ட நாட்களுக்கு பின் முன்னணி ஆட்டக்காரர் நெய்மர் விளையாட உள்ளார்.
பாரீஸ் செயிண்ட் ஜெர்மன் அணிக்கு அதிக விலைக்கு தேர்வு செய்யப்பட்ட பின் சர்வதேச ஆட்டத்தில் முதன்முறையாக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018-ல் நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கு பிரேசில் அணி, ஏற்கெனவே தகுதி பெற்ற நிலையில், ஈகுவடார் அணிக்கு எதிரான போட்டி தங்களுக்கு ஒரு பயிற்சியே என அந்த அணியின் பயிற்சியாளர் டைட் குறிப்பிட்டுள்ளார்.

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்