முகப்பு > உலகம்

​ஐபோன் வாங்க 10 நாட்கள் கடை வாசலில் காத்திருந்த இளைஞர்!

September 13, 2017

​ஐபோன் வாங்க 10 நாட்கள் கடை வாசலில் காத்திருந்த இளைஞர்!ஆஸ்திரேலியாவில், புதிதாக வெளியான ஐபோன்களை வாங்குவதற்காக பத்துநாட்களுக்கு மேல் ஒருவர் ஆப்பிள் போன் கடைக்கு வெளியே தங்கி வருகிறார்.

மேசன் குரோஷி எனும் இளைஞர் ஐபோன் வெறியர் என தன்னை அடையாளப்படுத்தி வரும் நிலையில், இதுவரை வெளியான எல்லா ஐபோன்களையும் வாங்கியுள்ளார்.

புதிதாக வெளியாகியிருக்கும் ஐபோனை முதலில் வாங்குவதற்காக இந்த வினோத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்,நேற்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 22 ம் தேதி அன்று விற்பனைக்கு வரும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்