இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​சீனாவில் 10000 திரையரங்குகளில் வெளியாகவுள்ள மெர்சல்!

September 11, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
14393 Views

நடிகர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான படம் மெர்சல். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் பல நாடுகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. 120 கோடி ரூபாய் பொருட்செல்வில் உருவான இப்படம் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க மெர்சல் திரைப்படம் ஏற்கனவே பல பழைய தமிழ்ப் படங்களின் கதை மற்றும் காட்சிகளை காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சங்கத்தில் அட்லீ மீது புகார் அளிக்கப்பட்டது. விஜய் அட்லீ கூட்டணியில் உருவான முதல் படமான 'தெறி' படம் குறித்தும் இதே போல் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், மெர்சல் திரைப்படம் உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றது.

சமீபத்தில் கூட கலைத்துறையில் உலகளவில் சாதனை படைக்கும் பிரபலங்களை அடையாளம் கண்டு அவர்களை கௌரவிக்கும் International Achievement Recognition Awards(IARA)ல் உலகளவிலான சிறந்த நடிகருக்கான பிரிவில் ஹாலிவுட் நடிகர்களின் பெயர்களுடன் மெர்சல் படத்திற்காக நடிகர் விஜயின் பெயர் இடம்பெற்று வெற்றியும் பெற்றது.

இதையடுத்து, மெர்சல் திரைப்படத்தை சீனாவில் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்யப்பட்டு, சீன மொழியில் மெர்சல் திரைப்படத்தை டப்பிங் செய்வதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் டிசம்பர் 6ல் சீனாவில் படம் வெளியாகிறது. இந்தியாவிலிருந்து சில பாலிவுட் படங்களும் பாகுபலி படமும் மட்டுமே சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தமிழ் படங்கள் எதுவும் இதுவரை சீனாவில் வெளியாகவில்லை.

எனவே மெர்சல் படம் சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் சீனாவில் 10,000 திரையரங்குகளில் மெர்சல் வெளியாகவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மெர்சல் படம் சீனாவில் அதிக வசூலை ஈட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )