இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

சீனாவில் மின் உதிரிபாகங்கள் தயாரிப்பு கடும் பாதிப்பு!

August 27, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
15008 Views

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா மீது இதுவரை இல்லாத மிகப் பெரிய அளவிலான வர்த்தகப் போரினை தொடுத்துள்ளார். சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 34 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரியினை உயர்த்தியுள்ளார். 

இதனை அடுத்து சீனாவும் உடனடியாக அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. அமெரிக்க சீனா இடையிலான வர்த்தகப் போரால், மின் உதிரிபாக உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரூ 1,400 கோடி அளவிற்கு, சீனாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அமெரிக்காவுக்கான மின் உதிரி பாக தொழில் முடங்கியுள்ளது.  இதனை விரைந்து நிவர்த்தி செய்ய, இருநாடுகளுன் புரிந்துணர்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், வல்லுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்க அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளால் நமக்கே இந்தப் பாதிப்பு திரும்பி வரும் என்று பராக் ஒபாமா கீழ் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியாக இருந்த ராபர்ட் ஹோலிமென் தெரிவித்துள்ளார். அன்மையில் அமெரிக்கா ஸ்டீல் மற்றும் அலுமினியம் இறக்குமதி மீது வரியினை உயர்த்திய போது சீனா, இந்தியா மட்டும் இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து கனடாவும் தங்களது எதிர்ப்பினை காட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )