114 ஆண்டுகளுக்குப் பின்னர் எஸ்யூவி பிரிவில் களமிறங்கிய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்! | Rolls-Royce Cullinan: All You Need To Know | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

114 ஆண்டுகளுக்குப் பின்னர் எஸ்யூவி பிரிவில் களமிறங்கிய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்!

May 11, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7046 Views

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் முதல் முறையாக தனது ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.

பிரபல பிரிட்டிஷ் நிறுவனமான ரோல்ஸ்ராய்ஸ், உயர் ரக சொகுசுக் கார் தயாரிப்பில் உலகின் முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. பணம் படைத்தவர்கள் எல்லோரும் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்கிவிட முடியாது, அவர்களின் கார்களை வைத்திருக்கும் தகுதியினை ரோல்ராய்ஸ் நிறுவனமே முடிவு செய்கிறது என்றால் அந்நிறுவனத்தின் மதிப்பு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்நிலையில் 114 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக எஸ்யூவி (SUV) மாடல் காரினை ரோல்ஸ்ராய்ஸ் களமிறக்கியுள்ளது. இதற்கு ‘Cullinan’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள Cullinan எனும் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட மிகப்பெரிய வைரத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இதனையே ரோல்ஸ்ராய்ஸ் தன்னுடைய முதல் எஸ்யூவி காருக்கு வைத்துள்ளது. 

3-Box SUV:

சொகுசு, பிரம்மாண்டம், வேகம், பெர்ஃபார்மன்ஸ் ஸ்டைல், பாதுகாப்பு என அனைத்திலும் உயர் ரகத்திலான Cullinan எஸ்யூவியினை 3-Box SUV என்று அழைக்கிறது  Rolls Royce நிறுவனம்.

ஏனெனில், இதன் கேபின் பகுதியில் இருந்து பின்புறம் உள்ள பூட் பகுதி கண்ணாடி கதவு மூலம் தனியே பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பட்டனை அழுத்துவன் மூலம் பூட் பகுதியில் இருந்து 2 சீட்கள் வெளிவருகின்றன. ஓய்வாக வெளிப்புறக் காட்சிகளை இந்த சீட்களில் இருந்தவாறே ரசிக்கலாம். இந்த வசதியினை முதல் முறையாக ரோல்ஸ்ராய்ஸ் புகுத்தியிருக்கிறது.

இஞ்சின்:

Cullinanல் 563 bhp ஆற்றலையும், 850 Nm டார்க்கையும் வெளிப்படுத்தவல்ல மிகப்பெரிய 6.75 லிட்டர் வி12 இஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வேகத்தை 250 கிமீ ஆக குறைத்து டியூன் செய்துள்ளனர். இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

டிசைன்:

ஃபேண்டம் மாடலின் டிசைனை அடிப்படையாக் கொண்டதாக கலினன் வெளிவந்துள்ளது. இது உயரம் கூட்டப்பட்ட ஃபேண்டம் கார் எனக் கூறலாம். ஏனெனில் ஃபேண்டம் காரையடுத்து அலுமினியம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டாவது ரோல்ஸ்ராய்ஸ் கார் இதுவாகும்.

அம்சங்கள்:

மற்றபடி அதே கிரில் அமைப்பு, புருவ வடிவ புருவம் போன்ற LED DRL-கள், மேட்ரிக் LED ஹெட்லைட்டுகள், ஏர் இன்டேக் மற்றும் பெரிய ஃபாக் விளக்குகள். பின் பக்கம் ரோல்ஸ் ராய்ஸ் லேகோவுடன்கூடிய D வடிவ டெயில் லைட்டுகள் வருகிறது. 

இந்தக் காரில் Suicide Doors எனப்படும் பின்னோக்கி திறக்கும் கதவுகள் உள்ளன. நீளமான ஷோல்டர் லைன், 22 இஞ்ச் வீல், ஸ்மூத்தாக இறங்கும் ரூஃப் லைன், தனியாகத் தெரியும் பூட் கதவுகள் என க்ளாசிக் மற்றும் மாடர்ன் கலந்த பக்கா ரோல்ஸ் ராய்ஸ் டிசைன் தெரிகிறது. போட்டியாளரான பென்ட்லி பென்டாகியாவைவிட பெரிதாகத் தெரிகிறது கல்லினன். 

சொகுசுக்கு பெயர் போன ரோல்ஸ்ராய்ஸ் கலினனின் டேஷ்போர்ட் மரத்திலானது. இதன் சீட்கள் அனைத்தும் விஷேச லெதரினால் ஆனது. சொகுசை அளிப்பதோடு மசாஜ் ஆப்ஷனையும் சீட்கள் அளிக்கின்றன. முன்புற சீட்களை விட பின்புற சீட்கள், நல்ல சாலை விசிபிளிட்டியை அளிக்கும் வகையில் சற்று உயரமாக்கப்பட்டுள்ளன. பின்புற சீட்களை மடக்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

Ecstasy controller:

முதல் முறையாக  Ecstasy controller எனும் சென்டர் கன்சோல் வந்துள்ளது. ஏர் சஸ்பென்ஷன் மூலம் காரின் உயரத்தை மாற்ற கன்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, காரில் பிரத்தியேகமாக ஆஃப் ரோடு பட்டனும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதிதிறன்மிக்க சஸ்பென்ஷன்:

இக்காரில் அதிதிறன்மிக்க சஸ்பென்ஷன் அமைப்பு அளிக்கப்பட்டுள்ளது, இது சாலையின் அமைப்பு, சக்கர ஊடுருவல், வேகம் உள்ளிட்ட பல கணக்கீடுகளை நொடிப்பொழுதில் மேற்கொள்வதன் வாயிலாக காரின் ஸ்மூத்தான பயணத்தை உறுதிசெய்கிறது. 

முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோல், ஆக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், வைஃபை ஹாட் ஸ்பாட், நைட் விஷன், பாதசாரிகள் மற்றும் வன விலங்குகள் எச்சரிக்கை அமைப்பு, பனோரமா வியூ கொண்ட நான்கு கேமராக்கள் உள்ளன.

all-round visibility, ஹெலிகாப்டர் வியூ, விபத்தைத் தடுக்கும் கொலிஷன் வார்னிங் எனப் பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன. 

கல்லினன் ஒரு முழுமையான எஸ்யூவி என்கிறது ரோல்ஸ் ராய்ஸ். இந்தச் காரை 4 ஆண்டுகளாக அனைத்து விதமான சாலைகளிலும் சாலை இல்லாத பகுதிகளிலும் டெஸ்ட் செய்துள்ளது இந்நிறுவனம். 

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரோல்ஸ்ராய்ஸ் கார் அடுத்த ஆண்டில் தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 5 கோடி ரூபாய் இதன் விலையாக இருக்கலாம்.

எஸ்யூவி ரக கார்களுக்கான சந்தை உலகலாவிய அளவில் அதிகரித்திருப்பதனை கருத்தில் கொண்டே ரோல்ஸ்ராய்ஸ் முதன் முறையாக இந்த பிரிவில் தனது முதல் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான கார்களை சந்தைப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே எஸ்யூவியான கல்லினன் அறிமுகம் செய்யப்பட்டாலும் ரெகுலர் ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் உள்ள அனைத்து உயர் ரக அம்சங்களும் இதில் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )