இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

​இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வீடியோக்களை இனி வாட்ஸ் அப்பிலும் பார்க்கலாம்!

May 9, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5296 Views

வாசகர்களை கவரும் வகையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் வாட்ஸ் அப், தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமல்லாமல், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ் அப்பிலேயே பார்க்கும் வகையில் புதிய பதிப்பை (version) வெளியிட்டுள்ளது.

தற்பொழுது இருக்கும் வாட்ஸ் அப்பில், பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் வீடியோக்களை யாராவது அனுப்பினால், அது அந்த இணைப்பில் குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று வீடியோவை காண்பிக்கும். ஆனால், தற்பொழுது வந்துள்ள புதிய பதிப்பில், வாட்ஸ் அப்பிலேயே அந்த வீடியோவை பார்த்துக்கொள்ளலாம். அதாவது, ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமிற்குள் நுழையாமல், அந்த வீடியோவை நம்மால் பார்க்க முடியும்.

அதுமட்டுமல்லாமல், வாட்ஸ் அப் குழுவில் (whatsapp group) உள்ள மற்ற பயனர்கள், குழுவின் அட்மினை மாற்றவோ, நீக்கவோ செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. தற்பொழுது ஆப்பிள் பயனீட்டாளர்களுக்கு மட்டும் இந்த சேவையை தந்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், விரைவில் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது.


Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லாக பறவைப் பார்வையில்

கூகுள் நிறுவனம் கூகுள் டூப்லெக்ஸ் (GOOGLE DUPLEX) என்ற

ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் அதன் போட்டி நிறுவனமான

வாசகர்களை கவரும் வகையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும்

டாக்ஸி உலகின் முன்னோடியாக திகழும் உபர் நிறுவனமும் மற்றும்

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)