இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

கீழே விழுந்தாலும் கவலைப்படத்தேவையில்லை... ஸ்மார்ட் ஃபோன்களை பாதுகாக்கும் புதிய Gorilla Glass 6..!

July 31, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6254 Views

ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுள் அதிமுக்கியம் வாய்ந்தது கைகளில் இருந்து மொபைல் போன்களை தவற விடுவதே ஆகும்.

அதிக விலை கொடுத்து வாங்கப்படும் ஸ்மார்ட் ஃபோன்கள், நம் மூன்றாவது கை போல மாறிவிட்ட சூழ்நிலையில், அவை கீழே விழும் அந்த ஒரு நொடியில் மொபைல் ஸ்கிரீன் நொருங்கிப் போகும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக விலையுயர்ந்த ஸ்மார்ட் ஃபோன்கள் நம் கண் முன்னே பாழாய் போவதை கண்டிருப்போம்.

இதன் காரணமாகவே Gorilla Glass எனப்படும் பாதுகாப்பு கண்ணாடியை நம் பொமைல் ஸ்கிரீனில் ஒட்டி பயன்படுத்தி வருகிறோம். கொரில்லா கண்ணாடியானது சில சமயங்களில் நமது மொபைலை பாதுகாக்கும் அரணாக செயல்படுகிறது.

இந்நிலையில் மொபைல்களுக்கு மேலும் பாதுகாப்பு தரும் புதிய தலைமுறை கொரில்லா கண்ணாடியான ‘Gorilla Glass 6’-ஐ அமெரிக்க நிறுவனமான Corning Incorporated அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய தலைமுறை Gorilla Glass-6 ஆனது, முந்தைய தலைமுறை Gorilla Glass-5ஐ காட்டிலும் இரண்டு மடங்கு பாதுகாப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மீட்டர் உயரத்தில் இருந்து 15 முறை உங்கள் ஸ்மார்ட் ஃபோன் கரடுமுரடான தளத்தில் கீழே விழுந்தாலும் மொபைல் பாதுகாப்பாக இருக்கும்.

சமீபத்தில் மொபைல் பயன்பாடு குறித்து எடுக்கப்பட்ட சர்வே ஒன்றின்படி பெரும்பாலானவர்கள் கை உயரத்திலிருந்தே தங்கள் மொபைல்களை கீழே தவற விடுவதாக தெரியவந்துள்ளது. ஒரு ஆண்டில் 7 முறை இது போன்று ஒருவர் தங்கள் மொபைலை தவற விடுவதாகவும், 50% தவறவிடுதல் ஒரு மீட்டர் அல்லது அதற்கு குறைவான உயரத்திலிருந்தே நடப்பதாகவும் அந்த சர்வேயில் தெரியவந்துள்ளது.

பிற சிறப்பு அம்சங்கள்:

உயர்ரக பாதுகாப்பை வழங்குவதுடன், ஆப்டிகல் தெளிவு (optical clarity), சிறந்த தொடு உணர்திறன் (touch sensitivity), கீறல் எதிர்ப்பு (scratch resistance), திறமையான வயர்லெஸ் சார்ஜிங் (efficient wireless charging), மேம்படுத்தப்பட்ட ஆயுள் (enhanced durability) ஆகிய சிறப்புகளையும் புதிய Gorilla Glass-6 பெற்றுள்ளது.

தற்போது சோதனை அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த Corning Gorilla Glass 6 , அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும்

உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )