இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​வாட்ஸ் அப் செயலி முடக்கம்!

November 3, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
10250 Views

உலகம் முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் முக்கிய சமூக வலைதளங்களுள் ஒன்றான வாட்ஸ் அப் செயலி இன்று பிற்பகல் சுமார் ஒரு மணி நேரம் உலகம் முழுவதும் முடங்கியது. 

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம், ஸ்னப் சேட் (Snap Chat) போன்ற சமூக வலைதளங்களுள் வாட்ஸ் அப் மிக முக்கியமான சமூக வலைதளமாகும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனீட்டாளர்களில் கிட்டதட்ட அனைவருமே வாட்ஸ் அப் செயலியையும் தங்கள் மொபைல்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திவருகின்றனர். இந்த வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வாட்ஸ் அப் இன்று (03-11-2017) பிற்பகல் 1:30 மணிக்கு பிறகு சுமார் 45 முதல் 60 நிமிடங்கள் வரை திடீரென முடங்கியது. முதலில் சென்னையில் மழையின் காரணமாக தான் முடங்கியதோ என அனைவரும் சந்தேகப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயல்படவில்லை என வாட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பின்னர் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து வருவதாக  அந்நிறுவனம் தெரிவித்தது. 

வாட்ஸ் அப் செயலி திடீரென செயல்படாமல் முடங்கியதால் சிலர் தங்கள் மொபைல் போனில் தான் கோளாறு என நினைத்து வாட்ஸ் அப் செயலியை நீக்கிவிட்டு மீண்டும் தரவிறக்கம் செய்து பார்த்தனர், ஆனால் அப்பொழுதும் வாட்ஸ் அப் செயல்படாததால் செய்வது அறியாமல் திகைத்தனர். பின்னர் சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு வாட்ஸ் அப் செயலி செயல்படத் தொடங்கியது. அதன் பிறகே உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனீட்டாளர்கள் பெரு மூச்சுவிட்டனர் எனபது குறிப்பிடத்தக்கது. 

வாட்ஸ் அப் செயலி முடங்கியதால், அது குறித்து இணையதளவாசிகள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் #WhatsAppDown என ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் டெரண்ட் ஆக தொடங்கிய சில நிமிடங்களிலேயே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்திற்கு வந்தது.

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)