முகப்பு > தொழில்நுட்பம்

பார்வையாளர்களை கடலுக்குள்ளேயே அழைத்துச்செல்லும் Blue Planet II ட்ரைலர்..!

September 28, 2017

பார்வையாளர்களை கடலுக்குள்ளேயே அழைத்துச்செல்லும் Blue Planet II ட்ரைலர்..!


பிபிசி தொலைக்காட்சியின் BLUE PLANET II எனப்படும் கடற்சார் தொடரின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சியால் தொடங்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற தொடர் The Blue Planet. முழுக்க முழுக்க கடற்சார் உயிரினங்களை பற்றியும் அவற்றின் நடத்தைகள் பற்றியும் மிக விரிவாக நம் கண்முன்னே கொண்டுவந்த இந்த தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. மனிதர்கள் கண்டிராத பல்வேறு உயிரினங்களையும் தண்ணீருக்குள்ளே சென்று மிகத்துல்லியமாக படிம்பிடித்து இத்தொடரில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். எனவே இத்தொடரின் அடுத்தபாகத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில், இத்தொடரின் இரண்டாம் பாகத்தையும் தொடங்கப்போவதாக 2013ம் ஆண்டே அறிவிக்கப்பட்டு தொடர்ந்து அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இத்தொடருக்கான ட்ரெயிலர் நேற்று வெளியானது.நாமே கடலுக்குள் நீந்திச்சென்று கடற்சார் உயிரினங்களை நேரில் காணும் உணர்வுகளை கொடுக்கக்கூடிய இந்த ட்ரைலர் காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 

இத்தொடரை புகழ்பெற்ற சூழலியலாளர் சர். டேவிட் அட்டன்பரோ இயக்குகிறார். உலகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹன்ஸ் சிம்மர் ( பைரட்ஸ் ஆப் தி கரீபியன் படத்திற்கு இசையமைத்தவர்) இத்தொடருக்கும் இசையமைப்பது இத்தொடரின் கூடுதல் சிறப்பாக அறியப்படுகிறது.

Categories : தொழில்நுட்பம் : தொழில்நுட்பம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்