இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

தேசிய அறிவியல் தினம் இன்று

February 28, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6592 Views

தேசிய அறிவியல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

உரிய அங்கீகாரம்

தனது மரபார்ந்த அறிவு வளங்களை தொன்றுதொட்டு உலகிற்குக் கொடுத்து வந்தே இருக்கிறது இந்தியா. ஆனால், அதில் பலவற்றிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது இல்லை. முதன்முதலாக, பல தடைகளைத் தாண்டி இந்தியாவிற்கு அப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதற்குக் காரணம் திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் 1888ம் ஆண்டு பிறந்த சர். சந்திரசேகர வெங்கட ராமன். சிறு வயது முதலே படிப்பில் படுசுட்டியான ராமன், தமது கடின உழைப்பால் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உயர்ந்தார். 

ஆசியாவின் முதல் நோபல் விஞ்ஞானி

இணை பேராசிரியரானாலும் இடைவிடாத ஆராய்ச்சி காரணமாக, அறிவியல் துறையில் சராசரியாக 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஆராய்ச்சி செய்து பெறப்படும் நோபல் பரிசை, வெறும் இரண்டே ஆண்டுகளில் தமது தீவிரமான ஆராய்ச்சி மூலமாக பெற்றார் சி.வி.ராமன். ஆசியாவின் முதல் நோபல் விஞ்ஞானி, தமிழகத்தின் முதன்மையான நோபல் பரிசு விஞ்ஞானி, பாரத ரத்னா& நோபல் பரிசு இரண்டையும் பெற்ற ஒரே இந்திய விஞ்ஞானி என சரித்திரத்தில் தன் பெயரை அழுத்தமாகப் பொறித்தவர் சர் சி.வி. ராமன். 

சர்.சி.வி.ராமனின் கண்டுபிடிப்பு

பாடலில் கவித்துவமாக ஒலிக்கும் இந்தக் கேள்விக்கு அறிவியல் பூர்வமாக பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு சர்.சி.வி.ராமன் கண்டுபிடிப்பு தான், உலகின் மிக முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றான ராமன் விளைவு. தேசத்தலைவர்களைப் போலவே அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில்  சர்.சி.வி ராமன் தமது ஆய்வு முடிவை வெளியிட்ட 1928ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியை நினைவு கூறும் விதமாக, 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆண்ட்ராய்டு போனுடன் வாழ வைத்த அறிவியல்

ஏன்? எதற்கு? எப்படி இந்தக் கேள்விகள்தான் அறிவியலின் அடிப்படை. இது தான் கற்களோடு வாழ்ந்த மனிதனை இன்று ஆண்ட்ராய்டு போனுடன் வாழ வைத்துள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நவீன கோயில் என்றழைக்கப்படும் ஆராய்ச்சிக் கூடங்களும், தொழில் நுட்ப நிலையங்களும் தேவை என்றார் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு. இதன் அடிப்படையிலேயே 1958ம் ஆண்டு அறிவியல் கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அறிவியலில் இந்தியா

இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பல்வேறு திட்டங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். தொழில்துறை ஆராய்ச்சி, நுண்ணுயிரியல் தொழில்நுட்பம், பெருங்கடல் வளர்ச்சித்துறை, விண்வெளி ஆராய்ச்சித்துறை, அணுமின்னியல், மின்னணுவியல், சுற்றுப்புறம் மற்றும் வனவியல்துறை போன்ற துறைகள் மூலமாகவும் 2003ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப கொள்கையின் உதவியுடனும் இந்தியா அறிவியலில் பல ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. 

இளைஞர்களின் ஆராய்ச்சிக்கு ஊக்கமளித்தால் இந்தியா அறிவியலில் இன்னும் பல உயரங்களைத் தொடும் என்ற உறுதியுடன் அனைவருக்கும் தேசிய அறிவியல் தின வாழ்த்துக்கள். 

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும்

உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

தற்போதைய செய்திகள் Sep 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )