இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

தொடர் சரிவை சந்திக்கும் விமான நிறுவனங்கள்!

August 23, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7783 Views

இந்திய விமான நிறுவனங்களுக்கு தற்போது போதாத காலம் என்றே சொல்லலாம். கிங் பிஷர் நிறுவன வரிசையில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.இந்த நெருக்கடியிலிருந்து அந்த நிறுவனம் மீளுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்திய விமான நிறுவனங்கள் தற்போது மிகவும் கடினமான காலக்கட்டத்தில் உள்ளன. சிறந்த சேவைக்காக செய்திகளில் பேசப்பட்ட இந்திய விமான நிறுவனங்கள் தற்போது அவற்றின் மோசமான நிதிநிலைமை, நஷ்ட கணக்குகளுக்காக செய்திகளில் பேசப்படுகின்றன.

ஸ்பைஸ்ஜெட்-ல் தொடங்கி கிங்ஃபிஷர், ஏர் இந்தியா என தற்போது நஷ்ட கணக்கில் இணைந்திருக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். சர்வதேச அளவில் பார்க்கும்போது இந்திய விமான போக்குவரத்து துறை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு உலகில் தயாராகும் புதிய விமானங்களில் 5 சதவீதம் இந்தியாவுக்கு வர இருக்கின்றன.

இது உண்மையாக இருந்தாலும்,  இந்திய விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதும் உண்மைதான். 2012ம் ஆண்டு கிங்ஃபிஷர் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது. அடுத்த கிங்ஃபிஷர், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்தான் என பொருளாதார பத்திரிகைகள் எழுத தொடங்கிய நேரத்தில் அஜய் சிங் தலைவராக பொறுப்பேற்று நிலைமையை மேம்படுத்தினார்.

ஆனால் நஷ்டத்தில் இருந்த மீளமுடியாமல் கிங்ஃபிஷர் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. விமான தரவரிசை நிறுவனமான ICRA-ன் கணிப்பின் படி 2018-19ம் ஆண்டில் இந்திய விமான நிறுவனங்களின் நஷ்டம் 3,600 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்களின் நஷ்டம் 2017-18ம் ஆண்டில் 2500 கோடி ரூபாயாக இருந்தது.

விமான நிறுவனங்களின் நஷ்டத்திற்கான காரணங்களில் முக்கியமானது விமான எரிபொருளுக்கான விலை உயர்வு. 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கிலோ லிட்டருக்கான விமான எரிபொருளின் விலை 51,640 ரூபாயாக இருந்தது. இதுவே 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 63,162ரூபாயாக உயர்ந்தது. அதாவது ஆறு மாதத்தில் கிட்டத்தட்ட 22 சதவீதம் உயர்ந்துள்ளது.

விமான நிறுவனங்களின் நிதிநிலையில் எரிபொருளின் விலை உயர்வு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தை பயணிகளின் மீது விமான நிறுவனங்களால் திணிக்கமுடியவில்லை. 

ஒரு வேளை கட்டணத்தை உயர்த்தினால் போட்டி நிறுவனங்களை நோக்கி பயணிகள் சென்று விடுவார்கள் என்ற அச்சத்தால் விமான நிறுவனங்கள் கடணத்தை உயர்த்துவதில்லை. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும், விமான நிறுவனங்களின் சரிவிற்கு காரணங்களுள் ஒன்றாக கூறப்படகிறது.

நடப்பு ஆண்டில் மட்டும் 9 சதவீதத்துக்கு மேல் ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது. இதனால் அதிக சந்தையை வைத்திருக்கும் இண்டிகோ நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபமும் 97 சதவீதம் வரை சரிந்திருக்கிறது. எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்கள் விமான நிறுவனங்களின் நஷ்டத்திற்கு முக்கிய காரணங்களாக இருந்தாலும் தனிப்பட்ட நிறுவனங்களின் தவறுகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

குறிப்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நஷ்ட கணக்கிற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிராமர் பால் கடந்த 2016ம் ஆண்டு ராஜினாமா செய்த பிறகு சர்வதேச அனுபவம் மிக்கவர் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நிதிநிலைமையை சீராக்க ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

எது எப்படியாக இருந்தாலும் மீண்டும் கிங்ஃபிஷராக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஆகிவிடக்கூடாது என்பது விமான பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விமான நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காணாது என்று கூறியுள்ளார். விமான எரிபொருளின் விலை உயர்வு என்பது இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச பிரச்சனை என்று தெரிவித்துள்ளார்.

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும்

உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )