இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

ஆப்பிள் நிறுவனத்தின் ‘டிசைன்’ விருதை முதன் முறையாக பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழர்

June 19, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9161 Views

ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் மாநாட்டில் ‘டிசைன்’ விருதை தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜா விஜயராமன் என்ற இளைஞர் பெற்று அசத்தியுள்ளார்.

தொழிநுட்ப முன்னோடி நிறுவனங்களுள் ஒன்றான  ஆப்பிள் நிறுவனத்தால் ஆண்டுதோறும் மென்பொருள் வல்லுநர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. Worldwide Developers Conference (WWDC). இதில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துக் கொண்டு தங்களது படைப்புகளை திரையிட்டு, அதில் சிறந்த உருவாக்கத்திற்கான விருதை பெற்று வருகின்றனர். 

அந்த வகையில் இந்தாண்டு அமெரிக்காவில் உள்ள கலிப்ஃபோர்னியாவில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தரப்பினரும் தங்களது படைப்புகளை சமர்பித்து விளக்கினர். இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இளைஞர் ராஜா விஜயராமன் கலந்துக் கொண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த ‘டிசைன்’ விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

‘கால்சி ஆப்’ (Calzy App) என்னும் ஆப்பை கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாக்க தொடங்கிய ராஜா விஜயராமன். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை விருப்பமில்லாமல் படித்து, பட்டம் பெற்ற பின் 3மாத அனிமேஷன் கோர்ஸ் சேர்ந்து படித்துள்ளார். 

பின்னர் ரஜினி நடித்த ‘ரோபோ’ உள்ளிட்ட பல பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றி வந்த ராஜா, தான் வைத்திருந்த ஐ-போன் மூலம் மென்பொருள் வல்லுநர்கள் மாநாட்டை பற்றி தெரிந்து, மென்பொருள் (மொபைல் ஆப்ஸ்) உருவாக்கம் மீது ஆர்வம் கொண்டதாக கூறியுள்ளார்.

தனது உருவாக்கத்தின் முதல் பதிப்பை கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியிட்ட ராஜா, அடுத்தடுத்த ஆண்டுகளில் அதனை மெருகேற்றி ‘கால்சி 3’ என்ற பெயருடன் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டார். ஆப்பின் எளிமையும், தோற்றமும் ஆப்பிள் நிறுவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. 

தனது ஆக்கத்தை பற்றி மேலும் பேசிய ராஜா, கால்குலேட்டர் 50 ஆண்டுகள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு அதில் பெரிய மாற்றங்கள் எதும் செய்யப்படாததாலும், ஐ-போனில் தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் இதனை வருங்காலத்திற்கும் ஏற்றவாறு மேம்படுத்தஎண்ணியபோதுதான் இந்த புதிய ‘கால்சி ஆப்’ (Calzy App) உருவானதாக கூறினார்.

ஆப்பிள் நிறுவனம் விருதை மேடையில் அறிவித்தவுடன் தன்னால் 3 நிமிடத்திற்கு மேலாகியும் அதனை நம்ப முடியவில்லை எனவும், ஒரு நெடுந்தூர கனவை அடைந்தது போல் உணர்ந்ததாக ராஜா நெழிச்சியுடன் தெரிவித்துள்ளார். இச்சாதனைக்கு பக்க பலமாக இருந்த தாய், தந்தை, மனைவி மற்றும் நண்பர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் விருது என்றவுடன், கண்டிப்பாக இவர் ஐ.ஐ.டி, என்.ஐ.டி இன்னும் ஏன் அமெரிக்காவின் சிலிகான் பகுதியில் பணிபுரிபவர் என்று எண்ணியவர்களுக்கு இது பெரிய ஏமாற்றமே. இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இந்த தமிழர் மென்பொருள் உருவாக்கத்தின் மீதுள்ள காதலால் பிறந்த புதிய தொழில்நுட்ப கவிதை என்றால் மிகையல்ல.

கால்சி ஆப்பின் சிறப்பம்சம்

➤'Calzy 3' Available for download only on iOS

➤Compatible with iPhone, iPad and Apple Watch

➤Calzy 3 app can spell out calculation results in 65 different languages 

➤Unique bookmarking function

➤The app also comes with an iMessage extension

➤Messaging service without leaving the app

➤App also comes with latest iOS technologies like 3D Touch, Face ID and Drag and Drop 

➤App costs Rs 159 on the App Store

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும்

உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )