முகப்பு > தொழில்நுட்பம்

நேரத்தை மிச்சப்படுத்தும் கூகுளின் ஸ்மார்ட் ரிப்ளை

May 18, 2017

நேரத்தை மிச்சப்படுத்தும் கூகுளின் ஸ்மார்ட் ரிப்ளை


கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் ரிப்ளை எனப்படும் புதிய அம்சத்தைக் ஜி-மெயிலில் கொண்டு வந்துள்ளது. 

இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்ட் மற்றும் ios போன்ற சாதனங்களுக்குப் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கில் உடனுக்குடன் பதிலளிப்பது போல மின்னஞ்சலை பார்த்து பதிலளிக்க முடியாத சிரமத்தை சீரமைக்க வந்த இந்த ஸ்மார்ட் ரிப்ளை, ஒரு மின்னஞ்சலுக்கு மூன்று விதமான பதில்களைத் தருகிறது. இதை அப்படியே அல்லது தொகுத்து வைத்து பயனாளர் உடனே பதிலளிக்கலாம். 

Google Smart Reply

இந்த புதிய அம்சம் நேரத்தை மிச்சப்படுத்துவதாக அமையும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் மேலும் சில மொழிகளில் இந்த அம்சம் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்