முகப்பு > தொழில்நுட்பம்

Ransomware வைரஸ் தாக்குதலிலிருந்து கணிணிகளை காப்பாற்ற புனித நீர் தெளித்து மந்திரித்த ரஷ்ய அரசு!

May 18, 2017

Ransomware வைரஸ் தாக்குதலிலிருந்து கணிணிகளை காப்பாற்ற புனித நீர் தெளித்து மந்திரித்த ரஷ்ய அரசு!


ரஷ்ய உள்துறை அமைச்சகத்தில் உள்ள கணிணிகளை ரன்சம்வர் வைரஸ் தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற பாரம்பரிய ரஷ்ய கிறிஸ்துவ சபையில் உள்ள பாதிரியார்களை வைத்து புனித நீரை (Holy Water) தெளித்து வழிபாடுகளை நடத்தியுள்ளது அந்நாட்டு அரசு.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள அரசு மற்றும் பெருநிறுவன அலுவங்களில் உள்ள கணிணிகளை ரன்சம்வர் (Ransomware) என்னும் வைரஸ் தாக்கி அந்த கணிணிகளை இயங்கவிடாமல் அந்த வைரஸ் செய்விடாமல் செய்து வந்தது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தபிக்க பணம் செலுத்தக்கோரி மின்னஞ்சல் மூலம் செய்தி வரும். இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளும் பல மென்பொருள் வல்லுநர்களை பயன்படுத்திவருகிறது.

இந்நிலையில் கம்யூனிச நாடாக அறியப்பட்ட ரஷ்யா, ரன்சம்வர் வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க அங்குள்ள பாரம்பரிய ரஷ்ய கிறிஸ்தவ சபையில் உள்ள உயர்மட்ட பாதிரியார்களை அழைத்து வந்து வழிபாடு நடத்தி, புனித நீரை தெளித்து, கம்யூட்டர்களையும், மற்ற தொழில்நுட்ப சாதனங்களையும் புனிதப்படுத்தும் பணியை செய்தனர்.

இந்தியாவில் விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்பும்போது, இந்து முறைப்படி, பூசாரிகளை வைத்து, பூஜை செய்யப்படுகிறது, இந்த செயலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பசுமாட்டின் சிறுநீரை புனித பொருளாக கருதி வீடுகளில் தெளிப்பதும், அதனை குடிப்பதும் வழக்கமாக உள்ளது. 

இந்தியாவில் மட்டும் இல்லை உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளிலும் மதத்தின் பெயரால் இது போன்ற வழிபாடுகளும் பூஜைகளும் நடத்தப்படுவது வழக்கமாகியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும்போது இதுபோன்ற செயல்கள் பிற்போக்குத்தனமான எண்ணங்களை பிரதிபலிப்பதாக உள்ளதாக முற்போக்கு சிந்தனையாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories : தொழில்நுட்பம் : தொழில்நுட்பம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்