இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

ஓலாவின் அடுத்த அதிரடி: குறைந்த வாடகையில் வருகிறது இ- ரிக்ஷா

April 16, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6626 Views

ஓலா கேப்ஸ் நிறுவனம் வரும் ஓராண்டில் 10,000 எலக்ட்ரிக் கார்களை தனது கேப்ஸ் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

இதில் எலெக்ட்ரிக் கார்கள், எலெக்ட்ரிக் ஆட்டோக்கள், எலெக்ட்ரிக் பஸ்கள், வாகனத்திற்கு மேல் சோலார் பேனல் அமைத்தல், சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைத்தல் ஆகியன உள்ளடங்கும். சுமார் ஒராண்டாக இந்த சேவை வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் எலெக்ட்ரிக் கார் சேவையை விரிவு படுத்த முடிவெடுத்த ஓலா நிறுவனம் "மிஷன் எலக்ட்ரிக்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் படி வரும் 12 மாதங்களுக்கும் 10,000 எலக்ட்ரிக் கார்களை சேவையில் இயக்கவும், வரும் 2021ம் ஆண்டிற்குள் சுமார் 10 லட்சம் எலக்ட்ரிக் கார்களை சேவையில் இறக்கவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஓலா நிறுவனத்தின் சி.இ.ஓ., அகர்வால் கூறுகையில் : "சுமார் ஓராண்டிற்கு முன்பு எலக்ட்ரிக் கார் சேவையை ஓலாவில் அறிமுகம் செய்தோம் சுமார் 40 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்ததில் எலெக்ட்ரிக் கார் எங்களுக்கு நல்ல அனுபவத்தை தந்திருக்கிறது. தற்போது இந்த சேவையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளோம்." என கூறினார்.

இதற்கிடையில் எலக்ட்ரிக் கார்களுக்க ஆங்காங்கே சார்ஜ் ஏற்றும் மையங்களையும் நிறுவன ஓலா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களில் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அதே நிலையில் ஓலா நிறுவனம் வாகனத்திற்கு மேலேயே சோலார் பேனலை வைத்து தானாகா சார்ஜ் ஏறும் வகையில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனையில் தற்போது உள்ளது.
மேலும், காரில் பயன்படுத்தும் போது குறைவான கரெண்ட் செலவை பராமரிப்பது எப்படி? கரெண்ட் செலவை குறைந்த என்ன என்ன செய்யலாம் என ஓலா நிறுவனம் வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறது.

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும்

உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )