அனைவரும் எதிர்பார்த்திருந்த வீடியோ வசதியை கொண்டுவரும் இன்ஸ்டாகிராம் | Instagram might soon let you post videos up to an hour long | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

அனைவரும் எதிர்பார்த்திருந்த வீடியோ வசதியை கொண்டுவரும் இன்ஸ்டாகிராம்

June 15, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
10140 Views

இளசுகள் குடியிருக்கும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் அதிக நேரம் ஓடும் வீடியோவை பதிவிடும் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூகவலைதளங்கள்தான் தற்போது அனைவரும் குடியிருக்கும் கூடாரமாக விளங்கி வருகிறது. நல்லது , கெட்டது என அனைத்தும் சரிக்குசமமாக இங்கு கொட்டிக்கிடக்கிறது. அதனால் பலரும் தங்களின் நேரத்தை இங்கு செலவிட்டு வருகின்றனர்.

பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ், இன்ஸ்டாகிராம் என எராளமான சமூகவலைதள பக்கங்கள் உலா வரும் நிலையில், இத்தளங்களில் வீடியோ பதிவுகளுக்கு மவுஸ் சற்று அதிமாக உள்ளது. மேலும் தற்போதுள்ள ஆப்ஸ் மூலம் சினிமா பாடல்கள், வசனங்கள் போன்றவற்றை நடித்து, பதிவேற்றி மகிழ்ந்து வருகின்றனர்.

ஆனால் அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெறும் 60 விநாடிகளே ஓடும் வீடியோக்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். இது பயனாளர்களுக்கு எப்போது ஏமாற்றமாகவே இருந்து வந்தது. 

இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் இருந்து வெளிவரும் THE WALL STREET JOURNAL  பத்திரிகை, இன்ஸ்டாகிராமில் ஒரு மணி நேரம் ஓடும் விடியோக்களை பதிவிடும் வசதி விரைவில் அமலுக்கு வரப்போவதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இன்ஸ்டாகிராம் பயனாளர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் 800 மில்லியன் பயனாளர்களை வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் வலைதளம் நீண்ட நெடிய வீடியோக்களை பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. எது எப்படியோ இனி இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும்

உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )