இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

இந்தியாவில் ஆப்பிள் ஐ-போன்களின் விலை அதிரடியாக குறைப்பு

September 14, 2018 Posted By : manoj Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
27129 Views

புதிய ஆப்பிள் ஐ-போன்களின் வருகையால், பழைய வகை ஐ-போன்களின் விலை அதிரடியாக இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட படைப்புகள் வெளியிடப்பட்டது. இதில் ஐ-போன் எஸ்.எக்ஸ், ஐ-போன் எஸ்.எக்ஸ் மேக்ஸ் மற்றும் ஐ-போன் எக்ஸ்.ஆர் முதலிய புதிய வகை அதிநவின போன்கள் வெளியிடப்பட்டது. 

இதன் நிறை குறைகளை தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டு வரும் நிலையில், ஐ-போன்களின் முந்தைய பதிப்புகளான 6எஸ், 6எஸ்+, 7, 8 உள்ளிட்ட போன்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 42,900 ரூபாய்க்கு விற்று வந்த ஐ-போன் 6எஸ் தற்போது ரூ.29,900-க்கு விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், ஐ-போன் SE வகை போன்களின் விற்பனையை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொண்டாலும், இந்தியாவில் இந்த வகை போனிற்கு மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இதன் விலை தற்போது ரூ.19,674-ஆக உள்ளது. ஐ-போன் வகைகளில் இது தான் குறைவான விலை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் வெகு நாட்களாக ஆப்பிள் நிறுவனத்தின் போன்களை விலை அதிகம் காரணமாக வாங்காமல் இருந்த வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு வரப்பிராசாதமாக அமையும் என்று தெரிகிறது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள ஐ-போன்களின் புதிய விலை பட்டியல்

 

மாடல்பழைய விலைபுதிய விலை
iPhone 6s 32GBRs. 42,900Rs. 29,900
iPhone 6s 128GBRs. 52,100Rs. 39,900
iPhone 6s Plus 32GBRs. 52,240Rs. 34,900
iPhone 6s Plus 128GBRs. 61,450Rs. 44,900
iPhone 7 32GBRs. 52,370Rs. 39,900
iPhone 7 128GBRs. 61,560Rs. 49,900
iPhone 7 Plus 32GBRs. 62,840Rs. 49,900
iPhone 7 Plus 128GBRs. 72,060Rs. 59,900
iPhone 8 64GBRs. 67,940Rs. 59,900
iPhone 8 256GBRs. 81,500Rs. 74,900
iPhone 8 Plus 64GBRs. 77,560Rs. 69,900
iPhone 8 Plus 256GBRs. 91,110Rs. 84,900
iPhone X 256GBRs. 95,390Rs. 91,900
iPhone X 256GBRs. 1,08,930Rs. 1,06,900


 

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும்

உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )