இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

டாப் 7 நியூஸ் இன் சோசியல் மீடியா

September 13, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
19299 Views

சாம்சங் கேலக்ஸி நோட் 8 அறிமுகம்

samsung


சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் வகை மொபைல் போன் வரிசையில், நோட் 8 வகையை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்தது. மொபைல் போன்கள் வாங்குவதில் இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மொபைல் நிறுவனங்கள் பல்வேறு புதிய உள்ளீடுகளுடன் மொபைல் போன்களை மாற்றம் செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றன. சாம்சங் நிறுவனத்தின் நோட் 7 வகை மொபைல் போன்களில் குறைபாடு காரணமாக திரும்ப பெறப்பட்ட நிலையில்,  நோட் 8 வகை போன்கள் பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குரங்கு செல்பி

selfie


இந்தோனேசியாவில் குரங்கு தன்னைத் தானே செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பாக எழுந்துள்ள காப்புரிமை பிரச்னைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வல புகைப்படக்காரர் ஸ்லேட்டர் கடந்த 2011ம் ஆண்டு ஜாவா காடுகளில் சுற்றுப்பயணம் செய்த போது கருங்குரங்கு ஒன்றின் செல்பி புகைப்படத்தை வெளியிட்டார். இது உலகளவில் பிரபலமானதை அடுத்து, இதனை விக்கிமீடியா நிறுவனம் தனது பக்கத்தில் வெளியிட்டதை எதிர்த்து, ஸ்லேட்டர் தொடர்ந்த வழக்கில், அவருடைய நிறுவனத்துக்கே காப்புரிமை உள்ளது என்றும் புகைப்படம் மூலம் வரும் வருமானத்தில் 25% பணத்தை இந்தோனேசியாவில் உள்ள கொண்டை வால் குரங்குகளைக் காப்பாற்ற அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதிர்ச்சி ரோபோக்கள்

Robo


பாலியல் ரோபோக்கள் மூலமாக மனிதர்களை கொலை செய்ய முடியும் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேற்குலக நாடுகளில் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப் பட்டு வந்த ரோபோக்கள், பாலியல் தேவைகளுக்காகவும் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் ரோபோக்களை மேம்படுத்தும் பொழுது, செயற்கை நுண்ணறிவுத்திறன் ப்ரோக்ராம் செய்யப்படும் என்பதால், அதனை ஹேக்கர்கள் பயனபடுத்தி கொண்டு, குறிப்பிட்ட நபரை கொலை செய்ய முடியும் என தெரியவந்துள்ளது.

ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி

Anand


பிறவியிலேயே கை கால்கள் இல்லாத சிறுவன் ஒருவன், முயற்சி செய்து விளையாட்டில் ஈடுபடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறுவனின் முயற்சியைப் பார்ந்து வியந்துள்ள மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், சிறுவன் தானாக, விளையாடும் சறுக்கின் படிக்கட்டில் முயற்சி செய்து ஏறுவதாகவும், ஒவ்வொரு படியாக மெதுவாக ஏறும் அவன் இறுதியில், வெற்றிகரமாக ஏறி முடித்து மகிழ்ச்சியுடன் சறுக்கி விளையாடி மகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்ததால், இனி எந்த வேலையும் கஷ்டமானது என நான் தெரிவிக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் நீண்ட கால்கள் கொண்ட பெண்

Leg


ரஷ்யாவை சேர்ந்த எகதரினா லிஸினா எனும் மாடல் அழகி உலகின், நீண்ட கால்கள் கொண்ட பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் 2008ல், சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், கூடைப்பந்து விளையாட்டு போட்டியில், ரஷ்யா சார்பில் விளையாடி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. எகதேரினாவுக்கு முன், ரஷ்யாவை சேர்ந்த, ஸ்வெட்லனா பாங்க்ரடோவா, உலகின் நீளமான கால்கள் உடைய பெண் என் சாதனையை பெற்றிருந்தது குரிப்பிடத்தக்கது

மெட்ரோ ரயிலில் பயணித்த குரங்கு

Metro


மனிதர்களை போல குரங்கு ஒன்று டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்தது பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 18 நொடிகளே பதிவான இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. மெட்ரோ ரயிலின் இருக்கையில் பயணிகள் அமர்ந்திருக்கும் நிலையில், எதையும் கண்டுகொள்ளாத குரங்கு ஒன்று நிதானமாக நடந்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

வெளியானது ஆப்பிள் 8

Apple


ஆப்பிள் நிறுவனத்தின் 3 புதிய ஐபோன்கள், செல்லுலர் கைக்கடிகாரம், 4 கே தரத்திலான தொலைக்காட்சி உள்ளிட்டவை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதனை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் அமெரிக்காவில் அறிமுகம் செய்தார். உலகின் புகழ் பெற்ற நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், அடுத்த தலைமுறைக்கான புதிய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் ஐ-போன் 8, 8 பிளஸ் மற்றும் ஐ- போன் எக்ஸ் என்ற புதிய ரக ஸ்மார்ட் போன்களில், முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் காவல்துறையினரின்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)