முகப்பு > தொழில்நுட்பம்

Xiaomi-யின் Redmi Note 4 ஸ்மார்ட் போன் வரும் 19ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு!

January 11, 2017

Xiaomi-யின் Redmi Note 4 ஸ்மார்ட் போன் வரும் 19ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு!


Xiaomi-யின் Redmi Note 4 ஸ்மார்ட் போன் வரும் 19ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


சீனாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான Redmi Note 4 ஸ்மார்ட் போன் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு வகைகளில் Redmi Note 4 சீனாவில் வெளியிடப்பட்டது.  2GB RAM / 16GB inbuilt storage மற்றும்  3GB RAM/ 64GB inbuilt storage என இரு மாடல்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2GB RAM / 16GB inbuilt storage மொபைல் இந்திய மதிப்பில் 9,000-க்கும், 3GB RAM/ 64GB inbuilt storage மொபைல் இந்திய மதிப்பில் ரூ.12,000-க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், Redmi Note 4 ஜனவரி 19ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மைக்ரோ மற்றும் நேனோ என இரு சிம்கள் போடும் வகையில் இந்த மொபைல் உருவாக்கப்பட்டுள்ளது. Android 6.0 Marshmallow அடிப்படையில் இயங்கும் MIUI 8 இயங்குதளம் கொண்டுள்ள Redmi Note 4 ஸ்மார்ட் போன், 5.5 இன்ச் முழு HD டிஸ்பிளே கொண்டுள்ளது. 13 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 128 GB மெமரிகார்டு போடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Categories : தொழில்நுட்பம் : தொழில்நுட்பம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்