இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​ஆன்ட்ராய்டு P அப்டேட்ஸ்!

May 10, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6121 Views

கடந்த செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற கூகுள் டெவலப்பர் கான்பரன்ஸில் ஆன்ட்ராய்டின் அடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பான  ஆன்ட்ராய்டு P பற்றி அறிவிக்கப்பட்டது.

இதில் மிக முக்கிய அம்சங்களான பேட்டரி மேனேஜ்மென்ட், பிரைவசி மற்றும் ஸ்மார்ட்போன் அடிக்ஷன் டூல்ஸ் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு P க்கான முழுமையான பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 

கடந்த பதிப்புகளை போல் குறிப்பிட்ட மொபைல்களுக்கு மட்டுமல்லாது இந்த ஆன்ட்ராய்டு P பதிப்பை கூகுள் பிக்சல் முதற்கொண்டு பிக்சல் 2, சோனி XZ2, சியோமி Mi Mix 2S, நோக்கியா 7 ப்ளஸ், ஒப்போ R15 ப்ரோ, விவோ X21, எஸ்சென்ஸியல் PH-1 மற்றும் வெளியாகப் போகும் ஒன் ப்ளஸ் 6 வரை உபயோகப்படுத்தலாம். 

இந்த ஆன்ட்ராய்டு P பதிப்பு கூகுள் நிறுவனத்தை சாராத ஸ்மார்ட்போன்களிலும் வேகமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்மார்ட்போன் உலகில் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனங்களான சாம்சங் மற்றும் ஹுவாய் ஆகியவை ஆன்ட்ராய்டு Pயின் லிஸ்டில் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. ஆன்ட்ராய்டு P யில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இதோ, 

Gesture Navigation :

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் Xல் பயன்படுத்திய புதிய நேவிகேஷன் முறையானது பின்னாளில் ஒன் ப்ளஸ் முதற்கொண்டு பல ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.  இதன்மூலம் மிக எளிமையான முறையில் home buttonஐ தொடுவதன் மூலம்  home pageற்கு செல்லலாம். இடது வலமாக home buttonஐ அழுத்திப் பிடித்து நகர்த்தி  ஓபன் ஆகியுள்ள செயலிகளை பார்த்துக் கொள்ளலாம். மேலும் இதே home buttonஐ மேல்நோக்கி தள்ளுவதன் மூலம் அப்ளிகேஷன்கள் overview ஐ பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு எளிமையாக உபயோகிக்கும் வகையில் நேவிகேஷன் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிளவுகள் வசதி (Notch support) : 

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களிலும் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றிற்கான இடைவெளிகள் மற்றும் பிளவுகள் ஒரேமாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆன்ட்ராய்டு P அப்டேட்டானது இந்த சென்சார்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் கேமராக்களுக்கான இடைவெளி மற்றும் பிளவுகளுக்கு ஏற்றபடி வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டிஸ்பிளேயில் ஐகான்கள், நோட்டிபிகேஷன்கள் மற்றும் ஸ்டேட்டஸ்கள் எவ்வாறு அமைய வேண்டுமென வசதியாகவும் எளிமையாகவும் இருக்கும்படியும் அமைக்கப்பட்டுள்ளது .

கடிகாரம் (Clock) : 

இந்த அப்டேட்டில் மிகச்சிறிய மற்றும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் நேரம். அதாவது இதுவரை டிஸ்பிளேவில் வலது பக்கம் இருந்து வந்த கடிகாரம் தற்போது இடது பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence predictions) :

இந்த செயற்கை நுண்ணறிவு வசதி மூலம் கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு பயனர்களின் தேவை என்ன என்பது குறித்து முழு ஆய்வு செய்து அடுத்ததாக பயனர்களின் தேவை என்ன என்பது குறித்து யூகித்து செயல்படும் விதத்தில் ஆன்ட்ராய்டு P உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஷார்ட்கட் வசதி மூலம் எளிதாக அடுத்தடுத்து பயனருக்கு என்ன செயலி தேவை என்பதை காட்டும் விதத்தில் இந்த ஆப்சன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ரிப்ளை (Smart replies for notifications) :

இந்த ஸ்மார்ட் ரிப்ளை வசதியானது நோட்டிபிகேஷன்களில் வரும் மெசேஜ்களுக்கு செயற்கை நுண்ணறிவு முறையில் என்ன ரிப்ளை செய்ய வேண்டும் என்பதை ஆன்ட்ராய்டு P தானாகவே காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

அடேப்டிவ் பேட்டரி (Adaptive Battery) : 

இந்த பேட்டரி வசதியின் மூலம் பேட்டரி சார்ஜை நீண்டநேரம் தக்கவைத்துக் கொள்ளலாம். அதாவது இந்த அடேப்டிவ் பேட்டரி வசதியானது அந்த சமயத்தில் நாம் எந்த அப்ளிகேஷனை உபயோகிக்கிறோமோ அதற்கான சக்தியை மட்டும் பேட்டரி வழங்கும்படி செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அடேப்டிவ் ப்ரைட்னஸ் (Adaptive Brightness) :

ஏற்கனவே ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் லைட் சென்சார் மூலம் ஆட்டோமேட்டிக் ப்ரைட்னஸ் வசதி நீண்ட ஆட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் புதிய அப்டேட்டில் செயற்கை நுண்ணறிவு வசதி மூலம் ஒரு தனிப்பட்ட பயனரின் அன்றாட ப்ரைட்னஸ் மாற்றங்களை கவனித்து அதற்கேற்றபடி தானாகவே ப்ரைட்னஸ் அட்ஜஸ்மென்ட் நிகழும் வகையில் இந்த அடேப்டிவ் ப்ரைட்னஸ் வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் அடிக்ஷன் கட்டுப்பாடு (A cure for phone addiction) : 

இந்த வசதியானது ஸ்மார்ட்போன் அடிக்ஷனை குறைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நாம் எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போனை உபயோகித்துள்ளோம். அந்த நேரத்தில் ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம்  செய்துள்ளோம் போன்ற தகவல்களை தொகுத்து வழங்குகிறது. மேலும் குறிப்பிட்ட app timer வசதியின் மூலம் ஒவ்வொரு அப்ளிகேஷனிற்கும் டைமிங் செட் செய்து கொள்ளலாம். அந்த டைம் முடிந்த பிறகு டிஸ்ப்ளே க்ரே நிறத்தில் மாறி Do Not Disturb modeக்கு சென்றுவிடும்.

மேம்படுத்தப்பட்ட தனியுரிமை (Enhanced privacy) : 

இந்த வசதியின் மூலம் பயனர்களுக்கே தெரியாமல் அவர்களது ஸ்மார்ட்போன்களில் உள்ள தகவல்களை ஆராயும் உளவு வேலை பார்க்கும் அப்ளிகேஷன்கள் தடுக்கப்படுகிறது.

அதாவது முழுக்க முழுக்க செயற்கை அறிவின் மூலம் ஸ்மார்ட்போன்கள் செயல்படும் நோக்கில் ஆன்ட்ராய்டு  P மென்பொருள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. 

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும்

உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )