இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களை தடுக்கும் ஆணுறைகள்!

December 1, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
11066 Views

குழந்தை பிறப்பிற்கு அடிப்படையான கருவுறுதலை தவிர்க்கவும், பாலியல் சார்ந்த நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவுமே ஆணுறைகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தில், எயிட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கும் ஆணுறைகள் குறித்து அறிதல் அவசியமானதே.

மனித குலத்தின் மிகப்பழம் நாகரீகங்களான எகிப்து, கிரீஸ் சமூகங்களிலேயே குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கியது தெரிகிறது. அக்காலக்கட்டத்தில் குழந்தைப் பிறப்பென்பது பெண்களின் கடனாக கருதப்பட்டதால், பெண்களை சார்ந்ததாகவே இம்முயற்சிகள் இருந்தன. இம்முறையில் ஆண்கள் சார்ந்ததே ஆணுறைகள்.

கருவுறுதலை தவிர்ப்பதற்கு மேற்குலகில் பொதுவாக கருத்தடை மாத்திரைகளும், ஆணுறைகளுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆணுறைகளின் பயன்பாடு குறித்த வரலாற்றை அறிய வேண்டுமென்று நாம் முயற்சிப்போமெனில் அது நம்மை சில நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதாய் உள்ளது. 

பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு வகையான பொருட்களினால் ஆணுறைகள் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஆணுறை 1642-ம் ஆண்டைச் சேர்ந்தது. விலங்கு சவ்வினால் செய்யப்பட்டிருந்த இந்த ஆணுறை இங்கிலாந்தின் டட்லே கேஸ்டல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

சமீபத்தில், அதாவது 19ம் நூற்றாண்டில் வேதிப்பொருட்களால் செறிவூட்டப்பட்ட துணிகளும், விலங்குகளின் குடல் மற்றும் சிறுநீர்ப்பை ஆகியவை ஆணுறையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நாம் பயன்படுத்தும் ரப்பரால் ஆன ஆணுறைகள் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டதால் பிரபலமடைந்தன.

20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், தொழில்நுட்பம் மற்றும் வேகமான வளர்ச்சியின் விளைவாக, ஆணுறைகளின் விலைகள் வெகுவாக குறைந்ததால், உலகமெங்கும் குடும்பக்கட்டுப்பாட்டிற்கு ஆணுறைகளை அதிகளவில் பயன்படுத்தும் போக்கு உருவாகியது. ஆயினும், பாலியல் உறவுகள் மூலம் பரவும் எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்ட பிறகே, உலகளவில் ஆணுறைகளின் பயன்பாடு அதிகரித்தது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே, 1985 முதல் 1987 வரை ஆணுறைகள் அணிவதன் அவசியம் குறித்த பரப்புரைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில்தொடங்கின. 7 ஆண்டுகள் தொடந்த பிரச்சாரத்தின் விளைவாய் இங்கிலாந்தில் 20 விழுக்காடு அளவு ஆணுறையின் பயன்பாடு அதிகரித்த போதிலும், 10 ஆண்டுகள் தொடர் பிரச்சாரத்தின் விளைவாக சுவிச்சர்லாந்தில் ஆணுறைகளின் பயன்பாடு 80% அளவு அதிகரித்தது. முதல் ஆணுறை விளம்பரம் 1991-ல் அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக தொடங்கின.

ஆணுறைகள் உருவாக்கும் தொழில் மிகப்பெரும் பணம் கொழிக்கும் தொழிலாக மாறிய நிலையில், அதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பல்வேறு அடுக்குகளான ஆணுறைகளும்,  நுகர்வோரை கவரும் வகையில் சாக்லேட், வெண்ணிலா உள்ளிட்ட Flavor-களிலான பல்வேறு வகையிலான ஆணுறைகள் சந்தைக்கு விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இவைகளுடன் வெப்பத்தை உருவாக்கும் ஆணுறைகளும், ஒளிரும் ஆணுறைகளும் கூட விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

கடந்த செவ்வாயன்று கூகுள் நிறுவனம், 'டேட்டாலி (Datally)'

குழந்தை பிறப்பிற்கு அடிப்படையான கருவுறுதலை தவிர்க்கவும், பாலியல்

2018ம் ஆண்டு முதல் அனைத்து வகையான மொபைல் போன்களிலும்

உலகில் முதன் முறையாக டிஜிட்டல் மாத்திரை ஒன்றினை

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.42 (லி)