எல்லோரும் ஒன்றுதான் என நினைப்பவர் கலைஞர் - கருணாநிதியின் ஓட்டுநர் நெகிழ்ச்சி! | Everyone thinks that the artist - Karunanidhi's driver is elastic! | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

எல்லோரும் ஒன்றுதான் என நினைப்பவர் கலைஞர் - கருணாநிதியின் ஓட்டுநர் நெகிழ்ச்சி!

August 9, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2422 Views

சென்னை நந்தனத்தை சேர்ந்த கோபிநாதன்  கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில், 6 வருடங்களாக ஓட்டுநராக இருக்கிறார். கருணாநிதிக்கு காரை மிக வேகமாக ஓட்டுவது பிடிக்காது என்றும், அவரது மறைவு பெரிய துன்பமாக உள்ளதாகவும் கோபிநாதன் கூறியுள்ளார்.

கருணாநிதியின் பேச்சைக் கேட்டால் நமக்குள்ளேயே மாற்றம் வரும் எனக் கூறியுள்ள அவரது ஓட்டுநர்,  எல்லோரும் ஒன்றுதான் என நினைப்பவர் கருணாநிதி என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 
மேலும், கருணாநதி கோபப்பட்டால் அதை  அப்பொழுதே மறந்து விடுவார் என்றும் கூறினார். தன்னை குடும்பத்தில் ஒருவனாகவே கருணாநிதி வைத்திருந்தார் என உருக்கமுடன் குறிப்பிட்ட கோபிநாதன்,  அவரது மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அவரால் பயன்படுத்தப்பட்ட 3 வாகனங்கள்  காத்திருக்கின்றன. கடந்த 2009-ம் ஆண்டு கருமாநிதிக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, சக்கர நாற்காலியை பயன்படுத்தத் தொடங்கினார். 

காருக்குள் சக்கர நாற்காலியை எளிதாக பயன்படுத்தும் வகையில், புதிய கார் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, டொயோட்டா நிறுவனத்தின் Alphard XH-10 ரக வாகனம் ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஜப்பானில் உள்ள அதன் உற்பத்தியகத்தில் இருந்து, 2009-ல் ஒரு புதிய வாகனமும், மற்றொரு வாகனம் 2011-ம் ஆண்டும் வாங்கப்பட்டது. 

கோபி, சஞ்சீவி என்ற இரு ஓட்டுநர்கள் இயக்கி வந்த அந்த வாகனங்கள் தற்போது கோபாலபுரம் இல்லத்திலும், அருகில் இருக்கும் காலியிடத்தில் ஒரு வாகனமும், அறிவாலயத்தில் ஒன்றும் என நிறுத்தப்பட்டிருக்கின்றது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )