சிலைகள் காணாமல் போன வழக்கு: டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு! | Disappeared Case: TVS Group Chairman Venu Srinivasan, Muniyan demanding petition! | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

சிலைகள் காணாமல் போன வழக்கு: டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு!

August 9, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1296 Views

ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள் காணாமல் போனதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த பழமையான சிலைகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிலைகள் காணாமல் போனது குறித்து, ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருந்த, டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். இதனால், ஸ்ரீரங்கம் கோயில் சிலை வழக்கில், தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, சீனிவாசன் முன்ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )