இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​கருப்புப் பணத்தை ஒழிக்கும் அறுவை சிகிச்சை தொடக்கம் - தமிழிசை சவுந்தரராஜன்

November 9, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1391 Views

கருப்புப் பணத்தை ஒழிக்கும் அறுவை சிகிச்சையின் தொடக்கம் தான் சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறை சோதனை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையில் அரசியல் ஏதும் இல்லை என தெரிவித்தார். டி.டி.வி தினகரன் அணியை பெரிய அரசியல் சக்தியாக பா.ஜ.க கருதவில்லை எனக் குறிப்பிட்ட அவர், வருமான வரித்துறையைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கும் இல்லை என கூறினார். 

1,800 அதிகாரிகள் சோதனையில் ஈடுபடும் அளவுக்கு ஒரு குடும்பம் மிகப்பெரிய அளவில் சொத்து சேர்த்திருப்பதையே இந்த சோதனை காட்டுவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 

ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் தடை விதித்திருக்க மாட்டார்கள் என்றும், கருத்து சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் நாட்டில் இல்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)