இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Jallikattu Game

மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் - ரஜினி

April 8, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2086 Views

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகினர் போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் முன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமது இல்லத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக கூறிய பின்பும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டினார். 

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் கோரிக்கை நியாயமானது என தெரிவித்த ரஜினி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகும் என குறிப்பிட்டார். இந்த கருத்துக்களால் கர்நாடகாவில் தமது படங்களை வெளியிட எதிர்ப்பு எழும்பட்சத்தில் அங்குள்ள மாநில அரசும், தயாரிப்பாளர்களும் பார்த்துக்கொள்வார்கள் என தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தண்ணீர், மண் போன்ற பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்று மாசு அடைந்தாலும் உலகம் அழிந்துவிடும் எனவும், அதுதொடர்பான தொழிற்சாலைகளை அமைக்கக்கூடாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த எதிர்ப்பு எழுந்துள்ளது குறித்து கேட்டதற்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாட வேண்டும் எனவும், இதேபோல் போட்டியை காண வரும் ரசிகர்களும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட கருப்பு நிற ஆடைகளை அணிந்து வர வேண்டும் எனவும் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூராப்பா நியமிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, காவிரி பிரச்னை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நியமன நடவடிக்கை சரியானது அல்ல என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஓமலூர் அருகே, பள்ளி மாணவிகளை ஆபாச படம்பிடித்துள்ளதாக

நடிகர் சிவாஜி கணேசன் எந்த வித விமர்சனத்திற்கும், அரசியலுக்கும்

மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமியாக தமிழகம் திகழ்கிறது

ஈரோடு அருகே, மாவட்ட நிர்வாகம் கால்நடை மருத்துவமனை அமைக்க

சென்னை  அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து

தற்போதைய செய்திகள் Jul 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.45 /Ltr (₹ -0.14 )
  • டீசல்
    ₹ 71.92 /Ltr (₹ -0.14 )