இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

குப்பையில் பதுக்கிய 50 சவரன் நகை பறிமுதல்..!

December 8, 2017 எழுதியவர் : velprasanth எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1390 Views

சென்னையில் கொள்ளையடித்த 50 சவரன் நகைகளை குப்பையில் மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்து போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை மண்ணடி மூர் தெருவில் கடந்த 4-ம் தேதி ரதியா என்பவரது வீடு புகுந்து பட்டப்பகலில் 60 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனயடுத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவை ஆய்வு மேற்கொண்டனர். அதில் அந்த பகுதியில் சாலையோரம் வசித்து வந்த லாரன்ஸ், அஜித், ஆகாஷ், பாலு ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

இதனைதொடர்ந்து அந்த நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் திருடிய நகைகளை பேசின் பாலம் ரயில் இருப்பு பாதை அருகிலுள்ள குப்பை கிடங்கு அருகே  நகைகளை மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.  இதனை அடுத்து,  குப்பையில் மறைத்து வைத்திருந்த  50 சவரன் நகைகளை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர. தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )