இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

அதிமுக எதிர்ப்பால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சர்க்கார் படக் காட்சிகள் பாதியிலேயே ரத்து!

November 8, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2367 Views

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி திரையரங்கில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் சர்கார் பட பேனர்கள் கிழித்து  எரிந்தனர். விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ரவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திரையரங்கம் முன் வைக்கப்பட்டிருந்த விஜயின் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை  கிழித்து எரிந்தனர்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டரை நோக்கி, அதிமுக காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர்  சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் வந்தனர். இதனை அறிந்தவுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்டன. அப்போது அதிமுகவினர் திரையரங்கு வளாகத்தில் புகுந்து கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

மதுரை அண்ணாநகரில் திரையரங்கை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும், மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். ((இப்போராட்டத்தின் போது, சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சியை நீக்கும் வரை, திரையரங்குகள் முன்  போராட்டம் நடைபெறும் என்றும், சர்கார் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம் என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

கோவையில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது, தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தேனி மாவட்டம் போடியில் உள்ள திரையரங்கை முற்றுகையிட்டு, விஜய் பேனர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விஜய் ரசிகர்களுக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. இதனால் சர்கார் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது முதலில் படத்திற்கு வசூலிக்கப்பட்ட பணம் திரும்ப தருவதாக கூறப்பட்டாலும், பணம் வழங்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டையில் சர்கார் திரையிடப்பட்டுள்ள  திரையரங்குகளில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என விசாரணை நடத்தினார். அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படவில்லை என ரசிகர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படம், இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவில் மட்டுமே இப்படம் 75 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் சர்கார் படம் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )