இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

​கொருக்குப்பேட்டையில் தனியார் பேப்பர் குடோனில் தீ விபத்து!

November 8, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
994 Views

சென்னை கொருக்குப்பேட்டையில் தனியார் பேப்பர் குடோனில் தீ விபத்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்

கொருக்குப்பேட்டை தியாகப்பா பகுதியில் புஷ்பராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமான இலவசமாக நடத்தி வரும் தனியார் பள்ளி மற்றும் பேப்பர் குடோன் ஏற்றுமதி ஆடைகள் தைக்கும் நிறுவனம் என இயங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர் கட்டத்தில் புகை வருவதை  கண்டு அலறி அடித்து ஓடினர் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீ அதிக அளவில் பரவி புகை மூட்டம் சுழ்ந்ததால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கொருக்குப்பேட்டை எழில்நகர் தண்டையார்பேட்டை பகுதியில் இருந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாமல் குறுகிய வழியாக இருந்ததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

முழுவதுமாக புகை மூட்டமாக இருந்ததை தண்ணீரை பாய்ச்சி  தீ பரவாமல் கட்டுபடுத்தினர். 150 மாணவர்கள் பயிலும் பள்ளிகட்டிடத்ததில்  தீடிரென்று ஏற்பட்ட தீ யால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.


Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )