முகப்பு > தமிழகம்

​கொடைக்கானலில் கடும் பனிமூட்டம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

October 08, 2017கொடைக்கானலில் கடும் பனிமூட்டம் காரணமாக, சுற்றுலா தலங்களை காண முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக மழை நீடிக்கிறது. மேலும், அங்கு கடுமையான பனி மூட்டமும் காணப்படுகிறது. 

இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள வாகன ஓட்டிகள், பகல் நேரத்திலேயே வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை இயக்குகின்றனர். 

முக்கிய சுற்றுலா தலங்களான பைன் மரக்காடு, மோயர் பாய்ண்ட், குணா குகை, பில்லர் ராக், நட்சத்திர ஏரி போன்ற பகுதிகளில் பனி மூட்டம் கடுமையாக இருப்பதால், இயற்கை எழில் காட்சிகளை முழுமையாக காண முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். 
 
இதே போல கொடைக்கானலில் பெய்த தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 37வது நாளாக தடை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Categories : தமிழகம் : தமிழகம் , #​கொடைக்கானல்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்