முகப்பு > தமிழகம்

​அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா - செல்லூர் ராஜு புகழாரம்!

October 08, 2017



அதிமுக ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்றும், அதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

மதுரை தல்லாகுளத்தில் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெறும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, இவ்வாறு கூறினார். 

டெங்குவை விட மோசமான கட்சி திமுக என்றும், அதன் ஆட்சி தமிழகத்தில் வராதபடி சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார். 

அதிமுக ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என குறிப்பிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வரும் துணை முதல்வரும் எடுக்கும் முடிவுகளுக்கு தமது கருத்துக்கள் பாதகமாக இருந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.

Categories : தமிழகம் : தமிழகம் , #செல்லூர் ராஜு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்