முகப்பு > தமிழகம்

​ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பரபரப்பு கருத்து!

October 08, 2017மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அவரை சடலமாகத்தான் பார்த்தோம் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டையில் நடந்த மாரத்தான் போட்டியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரை பார்க்க முயன்றதாகவும், ஆனால் சசிகலாவின் குடும்பத்தினர் தங்களை மருத்துவமனையின் இரண்டாம் தளம் வரை மட்டுமே செல்ல அனுமதித்ததாகவும் கூறினார். 

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை சம்மன் அனுப்பினால், முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்