இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

பரபரப்பான சூழலில் சென்னை காவேரி மருத்துவமனை!

August 7, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2780 Views

இன்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையிலிருந்து, திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கை வெளியானதிலிருந்து தமிழகமே பரபரப்பாகியுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இடையில் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று மீண்டும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. 

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில் கருணாநிதிக்கு போதுமான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் முக்கிய உடலுறுப்புகள் செயலிழப்பதாக கூறப்பட்டிருந்தது. ஏனெனில் கருணாநிதியின் உடல் உறுப்புகள் அனைத்தும் முதுமையின் காரணமாக மிகவும் மோசமடைந்துள்ளதாக விளக்கமளிக்கப் பட்டிருந்தது.

இதையடுத்து காவேரி மருத்துவமனை, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் மற்றும் அண்ணா மேம்பாலம் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சந்தித்து பேசினார். அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை  6 மணிக்கே மூடுவதற்கு தயார் நிலையில் இருக்குமாறு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் துவங்கியுள்ளது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )