இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

June 7, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3661 Views

தமிழகம் - புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அடுத்து வரும் 24 மணி நேரத்தில், வடதமிழகம் மற்றும்  தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமாக மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். 

அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ, கேளம்பாக்கம், ஜெயம்கொண்டம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ, காஞ்சிபுரம், செய்யாறு ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ, சென்னை நுங்கம்பாக்கம், அரியலூர், மீனம்பாக்கம், திருப்பத்தூர், குமாரபாளையம், கடலூர் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )