இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Jallikattu Game

​திட்டமிட்டபடி 16ம் தேதி வேலைநிறுத்தம்: மின்சார வாரிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

February 7, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1564 Views

ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கங்களுடன் மின்சார வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, திட்டமிட்டபடி வரும் 16ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, 26 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து, சி.ஐ.டி.யூ மற்றும் பி.எம்.எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன. 

வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதும் உடனடி நடவடிக்கையாக கடந்த மாதம் 22-ம் தேதி அன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். 

அப்போது வரும் 12-ம் தேதி ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி, மின்சார வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 

இதனையடுத்து, வரும் 16-ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய 10 சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் மின்வாரிய ஊழியர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், திட்டமிட்டபடி 16-ம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளிக்க

திருநெல்வேலி மாவட்டம் ராமநதி அணை மற்றும் கடனாநதி அணை

சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலைக்காக 18 கிலோமீட்டர்

கோவையில், வேளாண் நிலங்களை கையகப்படுத்தி அன்னூர் புறவழிச்சாலை

தற்போதைய செய்திகள் Jun 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 78.89 /Ltr (₹ -0.15 )
  • டீசல்
    ₹ 71.44 /Ltr