இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

​தமிழகத்தில் ஆளுநரின் ஆட்சி நடைபெறுகிறதோ என சந்தேகம் - வைகோ

December 7, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
942 Views

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது தமிழகத்தில் ஆளுநரின் ஆட்சி நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம் எழுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

ஓகி புயலால் உருக்குலைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று இன்று ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் ஓகி புயலின்போது மாயமான மீனவர்கள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்தார்.  

இந்நிலையில், இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மத்தியில் ஆளும் பாஜக அரசின் சார்பில் தமிழக அரசை ஆளுநர் ஆட்டிப்படைக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுவதாக குற்றம்சாட்டினார். 

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தைரியம் இல்லாமல் தமிழக அரசு திகழ்வதாகவும் வைகோ தெரிவித்தார்.  

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சிவகங்கை அருகே, குடும்ப பாரத்தை சுமக்கும் 14 வயது சிறுமி

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்த

திருச்சுழி அருகே கிருதுமால் நதியில் கட்டப்பட்ட புதிய

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை,

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.42 (லி)