இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்..!

December 7, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
955 Views

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும், என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ஓகி புயலில் ஊனமடைந்து மீன்பிடி தொழில் செய்ய முடியாத மீனவர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர்களுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும், எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், அனைத்து மீனவர் குடும்பங்களுக்கும், தலா 2,500 ரூபாயும், காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு, வாழ்வாதார உதவித் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

பிற மாநிலங்களில் கரைசேர்ந்த மீனவர்கள், சொந்த ஊர் திரும்ப டீசல், உணவுப்படி அதிகரித்துள்ளதாகவும், குஜராத், மகாராஷ்டிரா, லட்சத்தீவில் கரையேறிய மீனவர்களுக்கு, தலா 1,000 லிட்டர் டீசல், தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஓகி புயலால் சேதமடைந்த படகுகளை மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்கப்படும், என்று தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, மரணமடைந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு, சிறப்பு கல்வி உதவியுடன் திறன்வளர் பயிற்சி வழங்கப்படும், என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், கரைசேர்ந்த மீனவர்களின் விவரங்களை பத்திரிகைகள் மூலம் தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வி.கே.சசிகலாவின் கணவரும், 'புதியபார்வை' இதழின் ஆசிரியருமான

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை நாளை தமிழகம்

ஆன்லைன் பத்திரப்பதிவில் உள்ள குளறுபடிகள் 10 நாட்களில்

கிருஷ்ணகிரி அருகே பீர் பாட்டிலில் பாம்பு கிடந்ததால் மது

கடன் வாங்கி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம்

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)