ஆளுநரின் ஆய்வு செய்யும் நடவடிக்கைகளுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்! | stalin condemns that the activities of tamilnadu governor | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

ஆளுநரின் ஆய்வு செய்யும் நடவடிக்கைகளுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

December 7, 2017 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
904 Views

மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி எனும் கொள்கையை வலுவிழக்க செய்யும் முயற்சியில் தமிழக ஆளுநர் தொடர்ந்து ஈடுபட்டால், அதனை திமுக அறவழியில் எதிர்க்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மற்றும் திருப்பூரை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரியிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார். 

இது ராஜ்பவனை, மத்திய பாரதிய ஜனதா அரசு அரசியல் நடவடிக்கைகளுக்கு தீவிரமாகவும் பரவலாகவும் பயன்படுத்துகிறதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்புவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

"மாநில சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி” எனும் முழக்கம் ஓங்கி ஒலிக்கும் தமிழ் மண்ணில், அதற்கு நேரெதிராக நடைபெறும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ஆய்வு தொடருமானால் ஆளுநர் ஆய்வுக்கு செல்லும் மாவட்டங்களில் திமுக சார்பில் அறவழி போராட்டம் நடத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாவட்டங்களில் ஆய்வு செய்யும் “அரசியல் பணியை” ஆளுநர் உடனடியாகக் கைவிட்டு, தமிழக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )