இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

கல்வியில் தமிழகத்தை யாராலும் மிஞ்ச முடியாது என்ற நிலை உருவாக்கப்படும் - செங்கோட்டையன்

December 7, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
781 Views

கல்வியில் தமிழகத்தை யாராலும் மிஞ்ச முடியாது என்ற நிலையை அதிமுக அரசு கொண்டு வரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் புழல் சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் மெட்ரிக்குலேசன் 
பள்ளிகளுக்கான அங்கீகார ஆணை வழங்கும் விழாவினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். 

பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகம் பெற்று தரும் கல்வியாக இருக்கும் வகையில் தமிழக அரசு பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.   

மத்திய அரசு நடத்தும் எந்த ஒரு தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் நடத்தப்பட உள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் செங்கோட்டையன், முதற்கட்டமாக 100 இலவச பயிற்சி மையங்கள் வரும் ஜனவரி மாதத்திற்குள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அரசு

சிவகங்கை அருகே, குடும்ப பாரத்தை சுமக்கும் 14 வயது சிறுமி

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்த

திருச்சுழி அருகே கிருதுமால் நதியில் கட்டப்பட்ட புதிய

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.42 (லி)