முன்விரோதம்: ரவுடி ஓடஓட விரட்டி படுகொலை..! | rowdy murdered by a gang | News7 Tamil

இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Breaking News

Jallikattu Game

முன்விரோதம்: ரவுடி ஓடஓட விரட்டி படுகொலை..!

December 7, 2017 எழுதியவர் : velprasanth எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1676 Views

சென்னையில் முன்விரோதம் காரணமாக ரவுடியை கொலை செய்த சம்பவத்தில், முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிகரித்து வரும் ரவுடிகளின் நடவடிக்கைகளை மாநகர போலீசார் தடுத்து நிறுத்திட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த குமார் என்கிற பல்பு குமார் மீது, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருவல்லிகேணி  கேனால் சாலையில் வசித்து வந்த இவருக்கும், அதே பகுதியை சேரந்த மற்றோரு கோஷ்டியை சேர்ந்த சொரி விஜய்க்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில்,  கடந்த ஏப்ரல் மாதம் பல்பு குமாரை அரிவாளால் வெட்டி தாக்கிய வழக்கில், போலீசார் சொரி விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  பல்பு குமார் குணமாகி வந்த தகவலை அறிந்த சொரி விஜய்யின் தம்பி ஹரி, பிரகாஷ் உள்ளிட்டோர், அவரை ஓட ஓட விரட்டி கட்டையால் அடித்தும், கல்லால் தாக்கியும் படுகொலை செய்து தப்பினர். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக  திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்பு குமார், தற்போது எந்த பிரச்சினைக்கும் செல்லமால், திருந்தி பட்டினப்பாக்கத்தில் வசித்து வந்த நிலையில் முன்விரோதம் காரணமாக சொரி விஜய் கும்பல் கொலை செய்து விட்டதாக  அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து பல்பு குமார் கொலை வழக்கில் பிரசாந்த் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஹரி, உள்ளிட்ட மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 15
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )