இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Jallikattu Game

​ தமிழக அரசின் குற்றச்சாட்டு தவறானது - நளினி விளக்கம்

December 7, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1312 Views

பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவேன் என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டு தவறானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். 

தமது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிடக்கூடும் என கூறி பரோல் வழங்க முடியாது என தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதற்கு தற்போது நளினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த 2014ம் ஆண்டு தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் தான் விடுதலை பெற முடியவில்லை என நளினி குறிப்பிட்டுள்ளார். 

தம்மை விடுதலை செய்ய முடிவெடித்த தமிழக அரசு தற்போது பரோல் வழங்க மறுப்பதை ஏற்றுகொள்ள முடியாது என்றும் மனுவில் நளினி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதைபோல தமக்கும் 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என நளினி கேட்டுக்கொண்டுள்ளார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் வந்தால் தான் நாடு வளர்ச்சியடையும்

திமுக குறித்தோ, ஸ்டாலின் குறித்தோ சமூகவலைதளங்களில்

மதுரை காளவாசல் சந்திப்பில் 54 கோடி ரூபாய் மதிப்பில் பறக்கும்

கர்நாடக அணைகளில் விநாடிக்கு ஒருலட்சம் கன அடி உபரி நீர்

தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.93 /Ltr (₹ 0.06 )
  • டீசல்
    ₹ 72.48 /Ltr (₹ 0.05 )