பாட்டியை உருட்டு கட்டையால் தாக்கிக்கொன்ற பேரன் கைது..! | man murdered his grandma | News7 Tamil

இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Breaking News

Jallikattu Game

பாட்டியை உருட்டு கட்டையால் தாக்கிக்கொன்ற பேரன் கைது..!

December 7, 2017 எழுதியவர் : velprasanth எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1097 Views

பெரியகுளம் அருகே மதுகுடிக்க பணம் கொடுக்காததால், போதையிலிருந்த பேரனே, பாட்டியை உருட்டு கட்டையால்  அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் போலீசாரிடம் முன்கூட்டியே புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியில் வசித்து வரும் மகள் கருப்பாயி வீட்டில், மூதாட்டி ஒச்சம்மாள் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பாயின் மகன் ராஜா வீட்டிற்கு, கொள்ளுபேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக பாட்டி ஒச்சம்மாள் சென்றுள்ளார். அப்போது, குடித்துவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு வந்த பேரன் ராஜா, மனைவி மீனாட்சியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.  பின்னர் பாட்டி ஒச்சம்மாளிடம் பணம் கேட்டுள்ளார்.  பணம்தர ஒச்சம்மாள் மறுத்ததையடுத்து, அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து மகள் கருப்பாயியுடன், உடனடியாக ஜெயமங்கலம் காவல் நிலையம் சென்று பேரன் ராஜாவின் கொலை மிரட்டல் குறித்து ஒச்சம்மாள் புகார் தெரிவித்துள்ளார். 

மது போதையில் இருப்பவரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள முடியாது எனவும், காலையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் இருவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.  மீண்டும் வீட்டுக்கு இருவரும் வருவதை பார்த்த பேரன் ராஜா, உருட்டுகட்டையை கொண்டு தாக்க முயன்றுள்ளார். இதனை கண்ட கருப்பாயி அங்கிருந்து தப்பிவிட, பாட்டி ஒச்சம்மாளை  பேரன் ராஜா கண்மூடித்தனமாக தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து  சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அங்கு மறைந்திருந்த கொலையாளி ராஜாவை போலீசார் கைது செய்தனர். 

முன்கூட்டியே மூதாட்டி அளித்த  புகார் மீது நடவடிக்கை போலீசார் எடுத்திருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்க முடியும் என உறவினர்கள்  வேதனை தெரிவித்தனர். தமிழகத்தில் மதுவினால் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க, பூரண மதுவிலக்கே தீர்வாக அமைந்திடும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 15
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )